ஹேப்பி பர்த் டே யாஷிகா...சோகத்தால் பிறந்தநாள் கொண்டாட்டம் தவிர்ப்பு

சென்னை : டெல்லியை சேர்ந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவரான யாஷிகா ஆனந்த், படித்தது, வளர்ந்தது அனைத்தும் சென்னையில் தான். மாடலாக தனது வாழ்க்கையை துவங்கிய யாஷிகா, கவலை வேண்டாம் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார்.

Recommended Video

Yashika Anand First EXCLUSIVE statement | 5 மாசம் நடக்க முடியாது | Balaji Murugadoss

தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜோம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் கடமையை செய் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் படம் இது.

பிக்பாஸால் பிரபலம்

பிக்பாஸால் பிரபலம்

2018 ல் விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா, சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவானவர். தொடர்ந்து தனது கவர்ச்சி ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். வெப் சீரிஸ், குறும் படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார்.

தோழியை இழந்த யாஷிகா

தோழியை இழந்த யாஷிகா

யாஷிகாவிற்கு இன்று 21 வது பிறந்தநாள். ஆனால் சமீபத்தில் கார் விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி பவானி உயிரிழந்த சோகத்தில் உள்ளார் யாஷிகா. அந்த விபத்தில் மிக மோசமாக காயமடைந்துள்ள யாஷிகா, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு இடுப்பு, வலது கால் உள்ளிட்ட பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், பின்புறம் முழுவதும் காயமடைந்துள்ளதாகவும் யாஷிகா நேற்று தெரிவித்திருந்தார்.

இது எனக்கு மறுபிறவி

இது எனக்கு மறுபிறவி

விபத்திற்கு பிறகு முதல் முறையாக நேற்று இன்ஸ்டாகிராமில் தனது உணர்வுகளை பகிர்ந்த யாஷிகா, ஹெல்த் அப்டேட்டையும் வெளியிட்டார். அடுத்த 5 மாதங்களுக்கு தன்னால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. படுத்த படுக்கையாக இருப்பதாகவும், தன்னால் அசையக் கூட முடியாது என தெரிவித்திருந்தார். இது தனக்கு மறுபிறவி என குறிப்பிட்ட யாஷிகா, தன்னை கடவுள் தண்டித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட வேண்டாம்

பிறந்தநாள் கொண்டாட வேண்டாம்

தான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியில் வாழ உள்ளதாக தெரிவித்த யாஷிகா, ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ளதால் தான் பிறந்தநாள் கொண்டாட போவதில்லை என்றும், ரசிகர்களும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு பதிலாக தனது தோழி பாவனியின் குடும்பத்திற்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆறுதல் சொன்ன பிரபலங்கள்

ஆறுதல் சொன்ன பிரபலங்கள்

தான் குடிபோதையில் கார் ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்களுக்கு மிகக் கடுமையாக பதிலளித்திருந்தார் யாஷிகா. மிக வேதனையுடன் யாஷிகா பகிர்ந்த பதிவிற்கு பிக்பாஸ் பிரபலங்களான ஐஸ்வர்யா தத்தா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, வனிதா விஜயக்குமார் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்திருந்தனர்.

வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்

வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்

பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என யாஷிகா கூறி இருந்தாலும், சமூக வலைதளங்களில் அவருக்கு பலர் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர். நண்பர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X