»   »  குதிரை காலை உடைத்த பாஜக எம்எல்ஏ நரகத்தில் எரிய கடவது: திரிஷா சாபம்

குதிரை காலை உடைத்த பாஜக எம்எல்ஏ நரகத்தில் எரிய கடவது: திரிஷா சாபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போராட்டத்தின்போது, காவல்துறை குதிரையின் காலை உடைத்த பாஜக எம்எல்ஏ, நகரத்தில் எரிய வேண்டும் என்று ஆக்ரோஷமாக சாபம் கொடுத்துள்ளார் நடிகை திரிஷா.

உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் தலைநகர் டேராடூனில் பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

Yes i pray u burn in hell, says Trisha about horse incident

போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசின் குதிரைப்படை பிரிவு வந்திருந்தது. அப்போது, வெறி வந்தவர் போல காணப்பட்ட கணேஷ் ஜோஷி, உருட்டுக்கட்டையை எடுத்து, போலீஸ்காரர் அமர்ந்திருந்த குதிரையொன்றின் கால்களை கொடூரமாக ஓங்கி, ஓங்கி அடித்தார்.

இந்த தாக்குதலில் குதிரை அப்படியே கீழே விழுந்தது. அதன் காலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை கலைத்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விலங்குகள் நல ஆர்வலரான நடிகை திரிஷா, தனது கடும் கோபத்தை டிவிட் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று மதியம் திரிஷா தனது டிவிட் ஒன்றில், குதிரை தாக்கப்பட்ட மீடியா செய்தியை ஷேர் செய்து, அதற்கு கொடுத்துள்ள கமெண்ட் இதுதான், "ஆம். உங்களை நரகத்தில் போட்டு எரிக்க வேண்டும் என்று நான் வேண்டுதல் வைக்கிறேன். இது ஒரு அசிங்கம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Yes i pray u burn in hell!! Absolutely ashamed, says Trisha about horse has been beaten up by BJP MLA in a tweet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil