twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மைக்கேல் ஜாக்ஸன்... செத்த பிறகும் துரத்தும் கடன்!

    By Shankar
    |

    MichealJackson
    'கல்லறையிலும் கூட நிம்மதியாக தூங்க விடாத தொல்லை கடன்தான்' என்ற பெரியவர்களின் வார்த்தை எத்தனை தூரம் உண்மை என்பதை மெய்ப்பிக்கிறது இசைமேதை மைக்கேல் ஜாக்ஸனின் வாழ்க்கை.

    மைக்கேல் ஜாக்சன் 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் மர்மமாக இறந்தார். அளவுக்கதிகமான மாத்திரைகளால் நேர்ந்த மரணம் இது என சிலரும், அப்பட்டமான, திட்டமிட்ட கொலை என்று இன்னும் சிலரும் கூறி வருகின்றனர்.

    1982 முதல் தற்பொழுது வரை ஜாக்சனுடைய பாப் இசை பாடல்கள் உலகம் முழுவதும் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று வசூலில் பெரும் சாதனை படைத்து வருகின்றன.

    உலகம் முழுவதும் இன்றளவும் அவரது பாடல்களை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த அளவுக்கு உலகப்புகழ் பெற்று வாழ்ந்து வந்த ஜாக்சன் சாகும் போது பெரும் கடனாளியாக இருந்தார். அந்தக் கடன்களை அடைக்கத்தான் அவர் பெரியதொரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரை வைத்து கோடி கோடியாக குவிக்க ஒரு கார்ப்பொரேட் கூட்டமே காத்திருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கான ரிகர்சலின்போதுதான் அவர் இறந்துபோனார்.

    அவர் 2009 ஜுனில் இறந்தபோது அவருக்கு 400 மில்லியன் டாலர் கடன் உள்ளதாக கடன்காரர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இறந்த ஜாக்சன் உறவினர்கள் அவருக்கு 159 மில்லியன் டாலர் அளவே கடன் உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.

    அதன்பிறகு ஜாக்சனின் சொத்துக்கள் மற்றும் அவருடைய வெளிவராத ஆல்பம் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலம் கடனை அடைக்க முடிவு செய்யப்பட்டது. இறுதியாக அவருடைய சொத்துக்கள் மற்றும் வெளிவராத பாப் இசை ஆல்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.

    இவற்றின் மூலம் 310 மில்லியன் டாலர் குவிந்தது. ஒருவரின் மரணத்துக்குப் பின், அவரது சொத்துக்கள் மூலம் திரட்டப்பட்ட அதிகபட்ச நிதி இதுதான். இந்தப் பணத்தை வைத்து கடன்காரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரிகள், சொந்தக்கார்ரகளுக்குத் தரவேண்டியது, கல்லறை வாடகை என சில செலவுகளைக் கழித்தபிறகு மீதமுள்ளதைத்தான் கடன்காரர்களுக்குத் தரமுடியும்.

    ஜாக்ஸனின் கல்லறை உள்ள இடத்துக்கு 9 லட்சம் டாலர் வாடகை செலுத்த வேண்டுமாம். காரணம் அந்த இடம் தனியாருக்கு சொந்தமாக உள்ளதாம்.

    ஜாக்ஸனின் நினைவுச்சின்ன ஆடைகள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு 35 ஆயிரம் டாலர் வாடகை கட்டவேண்டுமாம்!

    English summary
    The newly released Micheal Jacson's documents showing that the singer's estate has raked in some 310 million dollars since his June 2009 death, well on the way to wiping out the former King of Pop's 400-million-dollar debts. The cash has come from licensing deals, including one with Cirque Du Soleil, the Jackson documentary This Is It and his posthumous album Michael, released last year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X