»   »  கோலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட்டினரையும் ஆட்டிப்படைக்கும் ரீமேக் மோகம்

கோலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட்டினரையும் ஆட்டிப்படைக்கும் ரீமேக் மோகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: தமிழ் சினிமாவில் தான் ரீமேக் மோகம் பிடித்து ஆட்டுகிறது என்றால் ஹாலிவுட்கார்களையும் இந்த மோகம் விட்டு வைக்கவில்லை.

இந்த ஆண்டில் மட்டும் கோஸ்ட்பஸ்டர்ஸ், ஜுமாஞ்சி, தி எக்சார்சிஸ்ட், பேவாட்ச் பார்பிடன் பாரடைஸ் மற்றும் இண்டிபெண்டன்ஸ் டே என்ற 5
பிரபலமான ஹாலிவுட் படங்களை ரீமேக் செய்யவிருக்கின்றனர்.

காலத்தால் அழியாத இந்தப் படங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் உருவாக்கி வெளியிடும் திட்டத்தில் தற்போது ஹாலிவுட் உலகினர் இறங்கியுள்ளனர்.

கோஸ்ட்பஸ்டர்ஸ்

கோஸ்ட்பஸ்டர்ஸ்

1984 ம் ஆண்டு பில் முரே, ஹரோல்ட் ராமிஸ், எர்னி ஹட்சன் மற்றும் டான் அய்க்ரோத் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை தற்போது மீண்டும் ரீமேக் செய்து வருகின்றனர். 32 வருடங்களுக்குப் பின் ரீமேக் ஆகும் இப்படத்தில் கிறிஸ்டன் விக், மெல்லிசா மேகர்த்தி மற்றும் லெஸ்லி ஜோன்ஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். வருகின்ற ஜூலை மாதம் இப்படம் புதிய பொலிவுடன் திரைக்கு வருகிறது.

ஜுமாஞ்சி

ஜுமாஞ்சி

ராபின் வில்லியம்ஸ் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜுமாஞ்சி' படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. குழந்தைகள் கையில் கிடைக்கும் மேஜிக் போர்டு கேம் ஒன்றிலிருந்து விதவிதமான விலங்குகள் வெளிவருவது போன்று வித்தியாசமான கதையமைப்பில் உருவான அப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் ரீமேக் வரிசையில் மிகவும் புகழ்பெற்ற ஜுமாஞ்சி படமும் இடம் பிடித்திருக்கிறது.

இந்தப் படத்தில் ராபின் வில்லியம்ஸ் மற்றும் அந்தக் குழந்தைகளின் நடிப்பை மீண்டும் திரையில் கொண்டுவருவது மிகவும் கடினமான ஒரு செயல் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

தி எக்சோர்சிஸ்ட்

தி எக்சோர்சிஸ்ட்

குறைந்த செலவில் எடுக்கப்பட்டு 1973 ம் ஆண்டில் வெளியான தி எச்சோர்சிஸ்ட் படத்தை பேய்ப்படங்களின் குரு என்று தாராளமாக கூறலாம். ஏனெனில் இந்தப் படம் வந்த பின்னர் அதிகளவில் விதவிதமான பேய்களை வைத்து ஹாலிவுட்டினர் படமெடுக்க ஆரம்பித்தனர்.உலகின் தலை சிறந்த ஹாரர் கிளாசிக் என்று கொண்டாடப்படும் இப்படம் படப்பிடிப்பில் இருந்தபோது அதில் பணியாற்றிய 9 பேர் மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது. 12 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் சுமார் 400 மில்லியன் டாலர்களை குவித்தது.

தற்போது 43 வருடங்கள் கழித்து இந்தப் படத்தை மீண்டும் ரீமேக் செய்யவிருக்கின்றனர்.

பேவாட்ச் பார்பிடன் பாரடைஸ்

பேவாட்ச் பார்பிடன் பாரடைஸ்

1990 களில் வெளியான புகழ்பெற்ற தொலைகாட்சித் தொடரை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டு வெளியானது. அலெக்ஸாண்டிரா டட்டரியோ மற்றும் பலர் நடிப்பில் வெளியான இந்தப் படமும் தற்போது ரீமேக் பட்டியலில் இணைந்துள்ளது.

இண்டிபெண்டன்ஸ் டே

இண்டிபெண்டன்ஸ் டே

ரீமேக் படமாக இல்லாமல் 1996 ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இப்படத்தின் தொடர்ச்சியை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.அறிவியல் மற்றும் அது தொடர்பான பேரழிவுகளை மையமாக வைத்து வெளியான இப்படம் வில் ஸ்மித்துக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. 75 மில்லியன் செலவில் எடுக்கபட்ட இப்படம் உலகம் முழுவதும் சுமார் 800 மில்லியன் டாலர்களை வாரிக் குவித்தது. இதனால் இந்தப் படத்தின் 2 வது பாகத்திற்கும் தற்போது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் வில் ஸ்மித்தின் கதாபாத்திரத்தை மிகவும் பயங்கரமான அமைத்திருக்கின்றனராம்.

இனி வரும் நாட்களில் மேலும் பல புகழ்பெற்ற ஹாலிவுட் படங்கள் இந்த ரீமேக் பட்டியலில் இணையலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

English summary
2016:Independence Day,Ghostbusters, Jumanji, the Exorcist and Baywatch: Forbidden Paradise 5 classic Hollywood movies all set to get a remake this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil