»   »  ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட பாலிவுட் பிரபலங்கள்

ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட பாலிவுட் பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு பிறகு ஹாலிவுட்டில் பெரிய ஆளாக ஆன பிரபலங்கள் பலர் உண்டு.

சினிமாவில் நடிக்கப் போகிறேன், பாடகர் ஆகப் போகிறேன் என்று ஊரை விட்டு கிளம்பி வந்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர்கள் தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல ஹாலிவுட்டிலும் உண்டு. வெற்றி என்பது எளிதில் கிடைக்கவில்லை என்பதை பல பிரபலங்கள் நிரூபித்துள்ளனர்.

இந்நிலையில் மிகவும் ஏழையாக இருந்து பெரும்பணக்காரர்களாக ஆன ஹாலிவுட் பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

டி கேப்ரியோ

டி கேப்ரியோ

டைட்டானிக் பட நாயகன் லியோனார்டோ டி கேப்ரியோ போதைப்பொருள் மற்றும் விபச்சாரம் நடந்த இடத்தில் வளர்ந்தவர். ஏழ்மை ஏழ்மை என்று தவித்த அவர் ஹாலிவுட் பக்கம் வந்து பெரும்பணக்காரர் ஆனார்.

ஜஸ்டின் பீபர்

ஜஸ்டின் பீபர்

இளம் வயதில் பெரும்பணக்காரர் ஆனவர் பாடகர் ஜஸ்டன் பீபர். அவர் பிரபலம் ஆகும் முன்பு எலிகள் விளையாடிய வீட்டில் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருந்துள்ளார்.

மரியா

மரியா

நடிகையும், பாடகியுமான மரியா கேரி சிறுவயதில் ஏழ்மையால் வாடியுள்ளார். பின்னர் தான் லாங் ஐலேண்டில் இருந்து நியூயார்க் வந்து பாடகியானார்.

ரவ்லிங்

ரவ்லிங்

ஹாரி பாட்டர் புத்தகங்கள் மூலம் உலகப் பிரபலம் ஆனவர் ஜே.கே. ரவ்லிங். அவர் பிரபலம் ஆகும் முன்பு தனது குழந்தையுடன் ஒரு அறையுள்ள வீட்டில் தங்கியுள்ளார். தனி ஆளாக குழந்தையை வளர்த்த அவர் ஒரு நாள் ரயில் தாமதமாக வந்தபோது தான் ஹாரி பாட்டர் புத்தகம் எழுத திட்டமிட்டார்.

ஜே - ஜி

ஜே - ஜி

பிரபல பாடகி பியான்ஸே நோலஸின் கணவரும் பாடகருமான ஜே -ஜிக்கு ஒரு காலத்தில் பிரெட் துண்டை பார்ப்பது பெரிய விஷயமாக இருந்தது. சிறுவயதில் வறுமை, அடி உதை என கஷ்டப்பட்டவர் அவர்.

English summary
Well, surprisingly, not every celebrity has had a life full of roses and songs from the very start. There are a few among the richest of Hollywood stars who have evolved from a homeless destitute living in rat infected basements to millionaires.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil