அவதார் 2 டைட்டில் அறிவிச்சாச்சு...பேருலையே எப்படி மிரட்டி இருக்காங்க பாருங்க

சென்னை : உலகமே எதிர்பார்த்து காண துடித்துக்கொண்டிருக்கும், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் அவதார் 2 படத்தின் டைட்டில் என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஹாலிவுட் டைரக்டரான ஜேம்ஸ் கேமரூன், 2009 ம் ஆண்டு ஆண்டு இயக்கிய பிரம்மாண்ட படம் தான் அவதார். அந்த சமயத்தில் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டு, அதிக வசூலை அள்ளி குவித்த படமாக அவதார் படம் கருதப்பட்டது. எத்தனை பிரம்மாண்டமான படங்கள் வந்தாலும் அவதார் படத்திற்கு இருக்கும் வரவேற்பு தற்போது வரை குறையாமல் உள்ளது.

தள்ளிப்போன அவதார் 2

தள்ளிப்போன அவதார் 2

படம் பார்ப்பவர்களை தனி உலகத்திற்கு அழைத்துச் செல்லும் உணர்வை ஏற்படுத்தி அவதார் படம், 2010 ம் ஆண்டு 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை உடனடியாக எடுக்க துவங்கினார் ஜேம்ஸ் கேமரூன். ஆனால் கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்த படத்தை வெளியிட முடியாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவதார் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

டிசம்பர் 18 ல் அவதார் 2

டிசம்பர் 18 ல் அவதார் 2

அவதார் இரண்டாம் பாக திரைப்படம் டிசம்பர் 16 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. உலகம் முழுவதும் 160 மொழிகளில், 14,000 க்கும் அதிகமான தியேட்டர்களில் அவதார் 2 வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவதார் முதல் பாகம் டிசம்பர் 18 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இதே போல் கிறிஸ்துமஸ் கால விடுமுறையை கணக்கிட்டு டிசம்பர் 16 ம் தேதி அவதார் 2 படத்தையும் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

அவதார் 2 டைட்டில் அறிவிப்பு

அவதார் 2 டைட்டில் அறிவிப்பு

அவதார் 2 படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று படத்தின் டைட்டிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயரே மிரட்டலாக இருப்பதால் இந்த படமும் அவதார் படத்தின் பிரம்மாண்டத்தை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவதார் 2 படம் மற்றொரு வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டிலே மிரட்டலா இருக்கே

டைட்டிலே மிரட்டலா இருக்கே

"அவதார்" படத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் தலைப்பு "அவதார்: தி வே ஆஃப் வாட்டர்" என வைக்கப்பட்டுள்ளது. முதல் பாகமான "அவதார்" படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலகட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்சனைகள், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும் துயரங்கள் அதைகடந்த அவர்களின் வெற்றி தான் இப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது .

மீண்டும் ரீரிலீசாகும் அவதார்

மீண்டும் ரீரிலீசாகும் அவதார்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்த இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், CCH பவுண்டர், எடி ஃபால்கோ, ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், "அவதார்" முதல் பாக திரைப்படம் செப்டம்பர் 23 அன்று தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கு முன் 2017 ம் ஆண்டே அவதார் படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X