Black Panther: Wakanda Forever trailer: ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் தாறுமாறான ஆக்சன் ட்ரீட்

அமெரிக்கா: மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் எம்.சி.யூ சர்ப்ரைஸ்களுக்குப் பஞ்சம் வைத்ததே இல்லை.

அட்வென்சர்ஸ் பட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளாக் பேந்தர் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் பிளாக் பந்தர் படத்தின் அதிரடியான ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

மார்வெல் சினிமாடிக்

மார்வெல் சினிமாடிக்

மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் எம்.சி.யூ சர்ப்ரைஸ்களுக்குப் பஞ்சம் வைத்ததே இல்லை. இந்நிலையில், தற்போது பிளாக் பேந்தர் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை செம்ம மிரட்டலாக வெளியிட்டுள்ளது. அதன்படி ப்ளாக் பேந்தர் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிளாக் பேந்தர் படம் 2022 மே 6-ல் வெளியாகும் என மார்வெல் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது. ஆனால், தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சூப்பர் ஹீரோ தான்

சூப்பர் ஹீரோ தான்

பொதுவாக கறுப்பினத்தவர்களை சூப்பர் ஹீரோ படங்களில் சைடு கிக்காகத்தான் வைத்திருப்பார்கள். கேப்டன் அமெரிக்கா, அயர்ன்-மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ் என எல்லோரது சைடு கிக்கும் கறுப்பின ஹீரோதான். அந்த வரிசையில், முதல்முறையாக ஒரு கறுப்பின சூப்பர் ஹீரோ படமாக 2018ல் பிளாக் பேந்தர் வெளியானது. படத்திலும் கறுப்பின அரசியலும் ஓரளவுக்கு பேசப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது வெளியாகும் இரண்டாம் பாகமும் அதே சாயலில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்சனில் மிரட்டும் ட்ரெய்லர்

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள பிளாக் பேந்தர் ட்ரெய்லர், ஹாலிவுட் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதிரடியான ஆக்சன் காட்சிகள், மிரட்டலான மேக்கிங் என வெரைட்டியாக மாஸ் காட்டியுள்ளது. பிளாக் பேந்தர் இரண்டாம் பாகத்துக்காக இத்தனை நாட்கள் காத்திருந்த ரசிகர்களுக்கு படம் தரமான ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். Ryan Coogler இயக்கத்தில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் 3டி படமாக உருவாகியுள்ள பிளாக் பேந்தர், நவம்பர் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதுவும் ப்ளாக் பஸ்டர் ஹிட் தான்

இதுவும் ப்ளாக் பஸ்டர் ஹிட் தான்

ப்ளாக் பேந்தர்' முதல் பாகம் அமெரிக்காவில் வெளியான மூன்று நாட்களில் மட்டும் 192 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்திருந்தது. டிஸ்னி, மார்வல் இணைந்து தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் மார்வல் காமிக்ஸ் கதாபாத்திரங்களின் நீண்ட திரைப்பட வரிசையில் ப்ளாக் பேந்தரும் இடம்பெறுகிறது. ஏற்கனவே 'கேப்டன் அமெரிக்கா சிவில் வார்' திரைப்படத்தில் இந்த கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்தக் கதாபாத்திரத்துக்கென தனி படமாக உருவாகியுள்ளது. கருப்பின நடிகர்கள், அவர்களது கலாச்சாரம், தற்போது நிலவும் கருப்பின அரசியல் என அமெரிக்க சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களின் பிரதிபலிப்பாகவே இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மேலும், இந்தப் படமும் வசூலில் மிகப் பெரிய சாதனை படைக்கும் என சினிமா ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X