சமந்தாவுடன் இணைந்து நடிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்? இணையத்தில் கசிந்த போட்டோக்கள்... ஹாட் நியூஸ்!
மும்பை: நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பிரபல ஹாலிவுட் நடிகை சமந்தா லாக்வுட்டுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் ஹ்ரித்திக் ரோஷன். ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ள ஹ்ரித்திக் ரோஷன், பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளார்.
கடைசியாக அவரது நடிப்பில் வார் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் ஹ்ரித்திக் ரோஷன், ஹாலிவுட் நடிகையான சமந்தா லாக்வுட்டுடன் இணைந்து நடிக்கவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா லாக்வுட்
அதாவது ஹாலிவுட் நடிகையான சமந்தா லாக்வுட், பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் கிரேக்க கடவுள் என அழைக்கப்படும் ஹ்ரித்திக் ரோஷனுடன் இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை சமந்தா லாக்வுட்.

ஹ்ரித்திக் ரோஷனுடன் சமந்தா
ஹ்ரித்திக் ரோஷனுடன் இருக்கும் மூன்று போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் சமந்தா. அதில் ஒரு போட்டோவில் இருவரும் நெருக்கமாக நின்றப்படி போஸ் கொடுத்துள்ளனர். அடுத்த போட்டோவில் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். மூன்றாவது போட்டோவில் சமந்தா லாக்வுட் தனது மஸ்ல்சை காட்டுகிறார்.

இந்த நடிகரை சந்திப்பதில் மகிழ்ச்சி
இந்த போட்டோவில் நடிகை சமந்தா லாக்வுட் பிங்க் கலர் பிரின்ட்டட் போஞ்சோ கறுப்பு பேண்ட் அணிந்து எப்போதும் போல ஸ்டன்னிங் லுக்கில் உள்ளார். நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கிரே கலர் ஜாக்கர்ஸ் வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்துள்ளார். இந்த போட்டோக்களுக்கு 'திரைப்படக் குடும்பத்தில் இருந்து வந்த இந்த நடிகரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி என கேப்ஷன் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா லாக்வுட்.

பெரிய பட்ஜெட் படம்
தற்போது ஹிருத்திக் சித்தார்த் ஆனந்தின் 'ஃபைட்டர்' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தீபிகா படுகோனுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார் ஹ்ரித்திக் ரோஷன். 'ஃபைட்டர்' திரைப்படம் இந்திய ஆயுதப் படைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என கூறப்படுகிறது. மேலும் இந்தப் படம் இந்திய மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கான ஒரு பெரிய பட்ஜெட் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Recommended Video

விக்ரம் வேதா ரீமேக்
நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் 'விக்ரம் வேதா' படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்கிலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் சைஃப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் ஹ்ரித்திக் ரோஷன். தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











