For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அடப் பாவமே... படம் பார்க்க வந்த ஒரே ஒரு ரசிகர்... பிளாட்டரைப் போலவே "ஃபிஃபா" எடுத்த படமும் போண்டி!

  |

  லாஸ் ஏஞ்செலஸ்: நல்ல வாயன் சம்பாதித்ததை நாற வாயன் தின்ன கதை என்று சொல்வார்கள்.. அந்தக் கதையாகியுள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) நிலை. அந்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த செப் பிளாட்டர் பதவியிலிருந்து துரத்தப்பட்ட நிலையில் ஃபிஃபா நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட யுனைட்டெட் பேஷன்ஸ் ஹாலிவுட் படம் பெரும் அடி வாங்கியுள்ளது.

  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் மொத்தமே பத்து தியேட்டர்களில்தான் அமெரிக்காவில் திரையிடப்பட்டு. அதன் வசூலோ வெறும் 607 டாலர்தானாம்... அதாவது இந்திய மதிப்பில் ரூ. 38,896தான். அதாவது அரை லட்சத்தைக் கூட தொடவில்லை இந்தப் படம், வெள்ளி, சனி வசூலில்.

  பிரடெரிக் ஆபர்டின் எழுதி, இயக்கிய படம் இது.

  ஒரே ஒரு குருக்கள் வர்றார் வழி விடுங்கோ!

  ஒரே ஒரு குருக்கள் வர்றார் வழி விடுங்கோ!

  என்ன கொடுமை என்றால், பீனிஸ் டவுன்டவுனில் உள்ள பிலிம்பார் தியேட்டரில் இந்தப் படம் வெறும் 9 டாலர்தான் வசூலித்துள்ளதாம். அதாவது ஒரே ஒருவர்தான் வந்து படம் பார்த்து விட்டுப் போயுள்ளார். பரவாயில்லையே..ஒரே ஒருவர் வந்தாலும் படத்தை ஓட்டியிருக்கிறார்களே...!

  மோசமான படம் பாஸ்

  மோசமான படம் பாஸ்

  இது ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் மிக மோசமான படம் என்ற பெயரை யுனைட்டெட் பேஷன் படத்துக்குத் தேடிக் கொடுத்துள்ளது.

  நேரம் சரியில்லண்ணே

  நேரம் சரியில்லண்ணே

  படம் திரைக்கு வந்த நேரம்தான் சரியில்லை என்கிறார்கள். ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் ஊழல் புகாரில் சிக்கி கடும் எதிர்ப்புக்குள்ளாகி ராஜினாமா செய்த சில நாட்களில் இந்தப் படம் திரைக்கு வந்தது. இதுவே அதற்குப் பெரும் பின்னடைவாகப் போய் விட்டது.

  தியேட்டர் பத்து.. வசூலோ சொத்தை

  தியேட்டர் பத்து.. வசூலோ சொத்தை

  நியூயார்க், லாஸ் ஏஞ்சலெஸ், வாஷிங்டன், பீனிக்ஸ், கான்சாஸ், மியாமி, மின்னபோலிஸ், ஹூஸ்டன், டல்லாஸ், பிலடெல்பியா ஆகிய நகரங்களில் இந்தப் படம் திரையிடப்பட்டது. ஆனால் வசூல் மகா கேவலமாக உள்ளது.

  விரல் விட்டு எண்ணும் அளவில்

  விரல் விட்டு எண்ணும் அளவில்

  நார்த் ஹாலிவுட்டில் 164 டாலர், வாஷிங்டனில் 161 டாலர், நியூயார்க்கில் 112 டாலர் என்று வசூல் போய்க் கொண்டுள்ளது.

  யார் நடிச்சு என்ன பயன்

  யார் நடிச்சு என்ன பயன்

  இந்தப் படத்தில் டிம் ராத், பிளாட்டர் கேரக்டரில் நடித்துள்ளார். சாம் நீல், பிளாட்டருக்கு முன்பு தலைவராக இருந்த ஜோவோ ஹவலெங்கே வேடத்தில் நடித்துள்ளார். ஃபிஃபாவை நிறுவியவரான ஜூல்ஸ் ரிமெட் வேடத்தில் ஜெரார்ட் டெபர்டியூ நடித்துள்ளார். இவரது வேடத்திற்குத்தான் சற்று வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

  இந்தப் படத்தை 32 மில்லியன் டாலர் செலவில் எடுத்துள்ளனர். ஆனால் போட்ட பணம் கண்டிப்பாக வராது என்று இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டனர்

  English summary
  Even bad publicity is usually good publicity — except in the case of the FIFA-financed film United Passions, which was quickly red-carded at the U.S. box office this weekend. Writer-director Frederic Auburtin's film beyond bombed in its limited debut in 10 theaters, earning a measly $607 on Friday and Saturday, according to those with access to Rentrak figures. The FilmBar theater in downtown Phoenix reported a gross of just $9, meaning only one person bought a ticket to see United Passions, which details the history of the now-embattled FIFA.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more