»   »  தத்துப்பிள்ளையை அடித்தாரா ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்?: விசாரிக்கும் எப்.பி.ஐ.

தத்துப்பிள்ளையை அடித்தாரா ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்?: விசாரிக்கும் எப்.பி.ஐ.

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தனது மகன் மேக்ஸை திட்டி தாக்கியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனது மூன்றாவது கணவர் பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அவர்களின் விவாகரத்து குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மகன்

மகன்

பிராட் பிட், ஏஞ்சலினா ஜூலி தங்களின் ஆறு குழந்தைகளுடன் பிரான்ஸில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா வந்துள்ளனர். விமானத்தில் பிட்டுக்கும், மூத்த மகன் மேக்ஸுக்கும்(15) இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

பிராட் பிட்

பிராட் பிட்

மேக்ஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிட் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. விமானம் அமெரிக்காவில் தரையிறங்கியதும் பிட் தனி வாகனத்தில் வீட்டிற்கு சென்றாராம்.

விவாகரத்து

விவாகரத்து

பிராட் பிட் மேக்ஸை அடித்ததால் தான் அந்த சம்பவம் நடந்த மறுநாளே ஜூலி விவாகரத்து கோரி விண்ணப்பித்தார் என்று கூறப்படுகிறது. மேக்ஸ் பிட், ஜூலியின் 3 தத்துப் பிள்ளைகளில் ஒருவர்.

எப்.பி.ஐ.

எப்.பி.ஐ.

வியாழக்கிழமை காலை ஹாலிவுட் ஹில்ஸில் உள்ள ஜுலி-பிட் வீட்டிற்கு சென்று பிராட் பிட்டிடம் மேக்ஸை தாக்கியது பற்றி எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஜூலி தனது குழந்தைகளுடன் மாலிபுவில் வாடகை வீட்டில் உள்ளார்.

English summary
FBI officials are investigating Hollywood actor Brad Pitt about abusing his teenager son Max verbally and physically.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil