»   »  குட்டி ரசிகையை காப்பாற்றிய பிராட் பிட்... வைரலாகும் வீடியோ

குட்டி ரசிகையை காப்பாற்றிய பிராட் பிட்... வைரலாகும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுமியை ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் பத்திரமாக காப்பாற்றி, சிறுமியின் தாயாரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான பிராட் பிட் தற்போது போரை மையமாகக் கொண்ட 'அலைட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மொராக்கோ அருகில் உள்ள கேனரி தீவுகள் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடி பிராட் பிட்டை அருகில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் படப்பிடிப்பைக் காண வந்த ரசிக, ரசிகையர் பிராட் பிட்டுடன் செல்பி எடுத்துக் கொள்ள முண்டியடிக்க அங்கே நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நெரிசலில் சிறுமி ஒருவர் சிக்கிக் கொண்டதைப் பார்த்த பிராட் பிட் அச்சிறுமியை பத்திரமாக காப்பாற்றி சிறுமியின் தாயாரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

பிராட் பிட்டின் இந்த செயலை அந்த நாட்டின் ஊடகங்கள் வெகுவாக பாராட்டி இருக்கின்றன.

English summary
Hollywood Actor Brad Pitt Saves Young Girl from Crowd.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil