twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கத்தியால் குத்தி, பெற்ற அம்மாவைக் கொன்றாரா? ஹாலிவுட் நடிகை அதிரடி அரெஸ்ட்

    By
    |

    சென்னை: பெற்ற அம்மாவை கத்தியால் குத்திக்கொன்றதாக, கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்த நடிகை கைது செய்யப்படுள்ளார்.

    கேப்டன் அமெரிக்கா- தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் என்ற ஹாலிவுட் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் மோலி ஃபிட்ஸ்ஜெரால்டு (38).

    அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தைச் சேர்ந்த இவர், நடிகையும், தயாரிப்பாளரும் ஆவார். கேப்டன் அமெரிக்கா படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த அவர், அந்தப் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

     கே.ஜி.எஃப் அளவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்குமா அவனே ஸ்ரீமன் நாராயணா கே.ஜி.எஃப் அளவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்குமா அவனே ஸ்ரீமன் நாராயணா

    கன்சாஸ் நகரம்

    கன்சாஸ் நகரம்

    இவரது தனது அம்மா பேட்ரீஸியா ஃபிட்ஸ்ஜெரால்டுடன் கன்சாஸ் நகரத்தில் இருந்து 22 மைல் தூரத்தில் ஒலாத்தே என்ற பகுதியில் வசித்து வந்தார்.

    உயிரிழப்பு

    இந்நிலையில், பலத்த ரத்தக்காயங்களுடன் கடந்த மாதம் 20 ஆம் தேதி வீட்டில் உயிரிழந்து கிடந்தார், அம்மா பேட்ரீஸியா. அவர் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    திடீர் கைது

    திடீர் கைது

    ஒன்றும் துப்புக்கிடைக்காத நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த மோலியை, போலீசார் திடீரென கைது செய்துள்ளனர். பெற்ற அம்மாவை, மோலியே கொன்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    தொடர்ந்து விசாரணை

    தொடர்ந்து விசாரணை

    கொலைக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார், மோலி ஃபிட்ஸ்ஜெரால்டுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Read more about: hollywood actrees arrest
    English summary
    Actor Mollie Fitzgerald, who featured in a minor role in "Captain America: The First Avenger", has been arrested by the police in the US state of Missouri, for allegedly stabbing her mother.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X