»   »  மாட்டிக்கிட்டு முழிக்கும் கேப்டன் ஜாக்.. சுவாரஸ்யமான பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் -5..!

மாட்டிக்கிட்டு முழிக்கும் கேப்டன் ஜாக்.. சுவாரஸ்யமான பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் -5..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் "பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்" படத்தின் கதாநாயகனான கேப்டன் ஜாக் ஸ்பேரோவின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது.

திரைப்பட ரசிகர்களால் மறக்கமுடியாத கதாபத்திரம், "பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்" படங்களின் கேப்டன் ஜாக் ஸ்பேரோ.

கேப்டன் ஜாக்காக சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்தவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்.

பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்:

பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்:

மிகவும் சாதாரண நடிகராக அறியப்பட்ட அவர், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படங்களில் நடித்த பிறகு அழியாப் புகழ் பெற்றுவிட்டார்.

மொத்தம் 4 பாகங்கள்:

மொத்தம் 4 பாகங்கள்:

இதுவரை 4 பாகங்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தின் 5 ஆவது பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தின் புகைப்படத்தை அதன் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோவை, இருவர் பெரிய கயிற்றால் கட்டியப்படி இருக்க, அவர் தனது வழக்கமான குறும்பு பார்வையுடன் உள்ளார்.

மாட்டி முழிக்கும் ஹீரோ:

மாட்டி முழிக்கும் ஹீரோ:

இதுவரை வந்துள்ள எல்லா படங்களிலும் கேப்டன் ஜாக் ஸ்பேரோ எதிரிகளிடம் மாட்டிக்கொண்ட பிறகு தந்திரமாக தப்பிக்கும் காட்சிகள் படு சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருக்கும்.

ரசிகர்கள் மகிழ்ச்சி:

ரசிகர்கள் மகிழ்ச்சி:

அதேபோல் இந்தப்படத்திலும் கேப்டன் ஜாக் ஸ்பேரோ எதிரிகளிடமிருந்து தப்பிவிடுவார் என அவரது தீவிர ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்கள்.

2017ல் வெளியீடு:

2017ல் வெளியீடு:

இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது கிடைத்துள்ள தகவலின் படி 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Jerry Brukheimer, producer of 'Pirates of the Caribbean' shared the first photo of Captain Jack Sparrow aka Johnny Depp from sets of the film which is currently shooting the fifth installment of the series.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil