twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வில் ஸ்மித்தை வெளியேற சொன்ன அகாடமி.. அறை வாங்கிய பின்னர் முதல் முறையாக மெளனம் கலைத்த கிறிஸ் ராக்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: வில் ஸ்மித்தின் மனைவியை ஆஸ்கர் மேடையில் கிண்டலடித்த கிறிஸ் ராக்கிற்கு கிடைத்த அறை சரியானது என உலகளவில் டிரெண்டாகி வரும் நிலையில், வில் ஸ்மித் அடித்தது தவறான விஷயம் என அகாடமி கண்டித்துள்ளது.

    அந்த அறை வாங்கிய பின்னர் மெளனம் காத்து வந்த 57 வயதாகும் நடிகர் கிறிஸ் ராக் பாஸ்டனில் நடந்த ஒரு காமெடி ஷோவில் முதன்முறையாக அந்த நிகழ்வு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    அந்த மறக்கமுடியாத சம்பவத்திற்கு பிறகு இதுவரை வில் ஸ்மித் உடன் கிறிஸ் ராக் பேசவே இல்லை என்பதை கண்ணீர் மல்க கூறி ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

    வில் ஸ்மித் இப்படி செய்திருக்கக் கூடாது... சிறை தண்டனை கிடைக்குமா ?வில் ஸ்மித் இப்படி செய்திருக்கக் கூடாது... சிறை தண்டனை கிடைக்குமா ?

    அறைந்த வில் ஸ்மித்

    அறைந்த வில் ஸ்மித்

    அலோபெசியா எனும் நோய் காரணமாக மொட்டை தலையுடன் காணப்படும் ஜடா பிங்கெட் ஸ்மித்தை கலாய்த்தபடி ஆஸ்கர் மேடையில் காமெடி நடிகர் கிறிஸ் ராக் பேச, கடுப்பான வில் ஸ்மித் மேடை ஏறி கிறிஸ் ராக்கிற்கு பளாரென ஒரு அறை விட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். ஆனால், அப்போது கோபப்படாமல் அமைதி காத்த கிறிஸ் ராக் மீண்டும் பேசத் தொடங்க, உன் வாயில் இருந்து மறுபடியும் என் மனைவி பெயர் வந்ததுன்னா அவ்வளவு தான் என வில் ஸ்மித் அசிங்கமாக கிறிஸ் ராக்கை திட்டினார்.

    விருது வாங்கியதும் மன்னிப்பு

    விருது வாங்கியதும் மன்னிப்பு

    ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அடித்தது பல நாடுகளில் ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்ட நிலையில், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் அந்த காட்சி ஒளிபரப்பாக காட்டுத் தீ போல உலகம் முழுவதும் டிரெண்டானது. அதன் பின்னர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வில் ஸ்மித்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மேடை ஏறி விருது வாங்கிய வில் ஸ்மித் தனது தவறான செயலுக்கு மன்னிப்பும் கேட்டார்.

    கிறிஸ் ராக் அமைதி

    கிறிஸ் ராக் அமைதி

    வில் ஸ்மித் மன்னிப்பு கேட்ட நிலையில், அவர் மீது கிறிஸ் ராக் எந்தவொரு புகாரும் கொடுக்காமல் அமைதி காத்து வந்தார். ஆனால், உலகம் முழுக்க வில் ஸ்மித் செய்தது தான் சரி என்றும் கிறிஸ் ராக் செய்தது தவறு என்பது போல மீம்கள் டிரெண்டான நிலையில், ரொம்பவே அப்செட் ஆகி விட்டார் கிறிஸ் ராக். இந்நிலையில், புதன்கிழமை இரவு பாஸ்டனில் நடந்த காமெடி ஷோவில் முதன்முறையாக மெளனம் கலைத்து அந்த விவகாரம் குறித்து பேசி உள்ளார்.

    பேச வில்லை

    பேச வில்லை

    அந்த சம்பவத்திற்கு பிறகு வில் ஸ்மித்திடம் தான் எதுவுமே பேசவில்லை என்றும் அவரும் தன்னிடம் வந்து தனிப்பட்ட முறையில் எந்தவொரு மன்னிப்பும் கேட்கவில்லை என அரங்கு நிறைந்த தன்னுடைய காமெடி ஷோ நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க பேசியுள்ளார் கிறிஸ் ராக். மேலும், அந்த நிகழ்வை 'ஷிட்' எனக் குறிப்பிட்டே அவர் ஜோக் அடிக்க ரசிகர்கள் கைதட்டி சிரித்தனர்.

    வெளியே போக சொன்னாங்க

    வெளியே போக சொன்னாங்க

    வில் ஸ்மித் என்னை அடித்த உடனே ஆஸ்கர் விதிமுறையை அவர் மீறியதாக அகடாமியின் தலைவர் டேவிட் ரூபின் நடிகர் வில் ஸ்மித்தை நிகழ்ச்சியை விட்டு வெளியேற சொன்னார். ஆனால், அதையும் வில் ஸ்மித் கொஞ்சம் கூட மதிக்கவில்லை. அதன் பிறகு அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டதும் அப்படியே அங்கிருந்த அனைவரும் அந்த விஷயத்தை மறந்தனர் எனக் கூறியுள்ளார்.

    வில் ஸ்மித் மீது நடவடிக்கை

    வில் ஸ்மித் மீது நடவடிக்கை

    ஆஸ்கர் நிர்வாகம் எந்தவொரு சூழ்நிலையிலும் வன்முறையை ஆதரிக்காது என்றும் வில் ஸ்மித் நடிகர் கிறிஸ் ராக்கை அடித்தது தவறு என்றும் அதற்காக அவர் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் புதன்கிழமை அகாடமி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வில் ஸ்மித் மனைவி பற்றி அப்படி ஜோக் அடித்ததற்கு ஆஸ்கர் என்ன நடவடிக்கை எடுக்கும் என வில் ஸ்மித் ரசிகர்கள் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    English summary
    Comedy actor Chris Rock opens up for the first time after Will Smith slapped him at the Oscars on Boston Comedy show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X