twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேன்சலாகுமா கேன்ஸ்.. கொரோனா அச்சம்.. தள்ளிப்போகுமா திரைப்பட விழா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

    |

    பிரான்ஸ்: சினிமா துறையின் மாபெரும் திருவிழாவான கேன்ஸ் திரைப்பட விழாவும் கொரோனா அச்சத்தால், தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகின் இரண்டாவது மிகப்பெரிய சினிமா மார்க்கெட்டான சீனா மார்க்கெட்டை காலி பண்ணியுள்ள கொரோனா வைரஸ் பீதி, தற்போது ஹாலிவுட் மார்க்கெட்டிலும் கை வைத்துள்ளது.

    உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் பரவி வருவதால், சினிமா துறையும் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி வருகிறது.

    மண்டியிட்ட ஜேம்ஸ்பாண்ட்

    மண்டியிட்ட ஜேம்ஸ்பாண்ட்

    ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட டேனியல் கிரெய்கின் ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டை படத்தின் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு ஒரே அடியாக தள்ளி வைக்கப்பட்டது. உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியது.

    தாமதமாகும் டாம் க்ரூஸ் படம்

    தாமதமாகும் டாம் க்ரூஸ் படம்

    பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ் நடிப்பில், உருவாகி வரும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் அடுத்த பாகம், இறுதிகட்ட படப்பிடிப்பை உலக நாடுகளில் நடத்த முடியாமல் திக்குமுக்காடி வருகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ரஷ்யா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் ஷூட்டிங் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

    எஃப் 9

    எஃப் 9

    கார் பிரியர்களின் ஃபேவரைட் படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உலகளவில் டிரெண்டானது. கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது, தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போடப்பட்டுள்ளது. மார்வெல் தயாரிப்பில் வெளியாகும் பிளாக் விடோவின் நிலை என்ன ஆகும் என்றும் தெரியவில்லை.

    தேதி மாற்றப்படுமா?

    தேதி மாற்றப்படுமா?

    சினிமா உலகின் மாபெரும் விழாவாக கருதப்படும் கேன்ஸ் திரைப்பட விழா, தனது 73வது ஆண்டு விழாவை வரும் மே 12 முதல் 23ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் அச்சத்தால், கேன்ஸ் திரைப்பட விழாவும் தள்ளிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பார்க்கலாம்

    பார்க்கலாம்

    மார்ச் மாத இறுதிக்குள் கொரோனா வைரஸின் தாக்கம் குறைகிறதா என்பதை பார்ப்போம். ஏப்ரல் மாதம் நிம்மதியாக நம்மால் சுவாசிக்க முடிந்தால், மே மாதம் திட்டமிட்டப்படி கேன்ஸ் திரைப்பட விழாவை நடத்தலாம். இல்லையென்றால், நிச்சயம் திரைப்பட விழாவின் தேதியை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என கேன்ஸ் விழா தலைவர் பியாரி லெஸ்க்யூர் பிரெஞ்ச் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

    English summary
    As per the latest update the officials of Cannes Film Festival are considering to cancel the grand affair if the outbreak worsens.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X