»   »  ஜேம்ஸ்பாண்ட் வேடத்துக்கு டேனியல் க்ரெய்க் பொருத்தமானவரல்ல! - ஹாலிவுட் நடிகர் அதிரடி

ஜேம்ஸ்பாண்ட் வேடத்துக்கு டேனியல் க்ரெய்க் பொருத்தமானவரல்ல! - ஹாலிவுட் நடிகர் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜேம்ஸ்பாண்ட் வேடத்துக்கு டேனியல் க்ரெய்க் கொஞ்சமும் பொருத்தமானவராக இல்லை என்று ஹாலிவுட் நடிகர் ஜான் க்ளீஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டின் 'மான்டி பைதான்' புகழ் ஜான் க்ளீஸ் சமீபத்தில் சேனல் செவன் நடத்திய தி மார்னிங் ஷோவில் கலந்து கொண்டார்.

Daniel Craig is too short to play James Bond, says John Cleese

அதில் ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையின் லேட்டஸ்ட் வரவான ஸ்பெக்டர் பற்றிய விவாதத்தில், இப்போதைய ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் க்ரெய்க், அந்த வேடத்துக்கு சற்றும் பொருத்தமாக இல்லை என்றார்.

காரணம் கேட்டபோது, "வேறு ஒன்றுமில்லை.. அவர் ரொம்ப குள்ளம். அந்த உயரம் பாண்ட் வேடத்துக்கு போதாது. எனக்குத் தெரிந்து சீன் கானரிக்குப் பிறகு பாண்ட் வேடங்களில் மிகக் கச்சிதமாகப் பொருந்தியவர் பியர்ஸ் பிராஸ்னன் மட்டுமே," என்றார்.

இதுவரை வெளியான ஜேம்ஸ்பாண்ட் படங்களில் உயரம் குறைந்தவர் டேனியல் க்ரெய்க்தான். அவர் உயரம் 5 அடி 8 அங்குலம். சீன் கானரி 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர். பியர்ஸ் பிராஸ்னன் 6 அடி 1.5 அங்குல உயரம் கொண்டவராக இருந்தார்.

டேனியல் க்ரெய்க்கை குறை சொல்லியிருக்கும் ஜான் க்ளீஸ் டை அனதர் டே, தி வேர்ல்ட் ஈஸ் நாட் எனஃப் ஆகிய ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த படங்கள்!

English summary
Hollywood actor John Cleese claimed that the present Bond hero Daniel Craig is not suitable for the role due to his height.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil