»   »  வின் டீசலைத் தொடர்ந்து நெய்மர்.. ஹாலிவுட்டைக் கலக்கும் தீபிகா படுகோனே!

வின் டீசலைத் தொடர்ந்து நெய்மர்.. ஹாலிவுட்டைக் கலக்கும் தீபிகா படுகோனே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: வின் டீசல்-தீபிகா படுகோனேவின் ஹாலிவுட் படத்தில் பிரபல கால்பந்து வீரர்களில் ஒருவரான, நெய்மர்(24) சிறப்புத் தோற்றத்தில் நடித்த்திருக்கிறார்.

கடந்த 3 ம் தேதி தொடங்கிய கோபா அமெரிக்கா போட்டியால், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் தற்போது கால்பந்து ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது.

இதற்கிடையில் பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான நெய்மர், வின் டீசல்-தீபிகா படுகோனேவின் 'டிரிபிள் எக்ஸ்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

Deepika Padukone to share screen with Neymar in 'xXx3'

24 வயதான நெய்மர் கால்பந்து உலகில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்.இந்நிலையில் அவரின் ஹாலிவுட் என்ட்ரி பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

'டிரிபிள் எக்ஸ்: தி ரிட்டன் ஆப் ஸேண்டர் கேஜ்' படத்தில் ஹாலிவுட் நடிகர் வின் டீசலுடன் இணைந்து தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஜூலை 22ம் தேதி டிரிபிள் எக்ஸ் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிடுகிறது.

இதன் மூலம் அறிமுகமான முதல் ஹாலிவுட் படத்திலேயே பிரபல நடிகர் வின் டீசல் மற்றும் உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர்களில் ஒருவரான நெய்மர் , ஆகியோருடன் சேர்ந்து நடிக்கும் அதிர்ஷ்டம் தீபிகாவுக்குக் கிடைத்துள்ளது.

தீபிகாவின் முதல் ஹாலிவுட் படமென்பதால் இந்தியாவிலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Brazil and Barcelona star footballer Neymar Jr has shot for a cameo in Deepika Padukone and Vin Diesel’s 'XXX: The Return Of Xander Cage'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil