»   »  காட்டாதீங்க, என் படத்தை குழந்தைகளுக்கு காட்டாதீங்க: பிரபல நடிகை வேண்டுகோள்

காட்டாதீங்க, என் படத்தை குழந்தைகளுக்கு காட்டாதீங்க: பிரபல நடிகை வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது ஹாலிவுட் படமான பேவாட்சை குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம் என நடிகை பிரியங்கா சோப்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலிவுட்டில் இருந்து டிவி தொடர் மூலம் ஹாலிவுட் சென்றார் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து அவர் ட்வெய்ன் ஜான்சனுடன் சேர்ந்து பே வாட்ச் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

படம் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி இந்தியாவில் ரிலீஸாக உள்ளது.

பிரியங்கா

பிரியங்கா

பே வாட்ச் படத்தில் பிரியங்கா சோப்ரா வில்லியாக நடித்துள்ளார். படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் பேசியுள்ளாராம். எதற்கெடுத்தாலும் எஃப் வார்த்தையை பயன்படுத்தியுள்ளாராம்.

குழந்தைகள்

குழந்தைகள்

பே வாட்ச் படம் சிறப்பாக வந்துள்ளது. ஆனால் தயவு செய்து குழந்தைகளுடன் படத்தை பார்க்க வேண்டாம். கெட்ட வார்த்தையாக வரும். அதனால் தான் அப்படி சொல்கிறேன் என்கிறார் பிரியங்கா.

மீடியா

மீடியா

பே வாட்ச் நாளை அமெரிக்காவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் மீடியாவுக்காக ப்ரீமியர் காட்சி நடத்தப்பட்டது. படத்தை பார்த்த அமெரிக்க மீடியாக்கள் துப்பிவிட்டன.

படமா இது?

படமா இது?

கரை ஒதுங்கிய செத்த மீன் தான் பே வாட்ச். படமா இது? பிரியங்கா சோப்ராவின் நடிப்பு மட்டுமே ஆறுதல் அளிக்கிறது என்று அமெரிக்க மீடியாக்கள் படத்தை கிழித்து விமர்சித்துள்ளன.

English summary
Priyanka Chopra has asked her fans not to take their kids to watch her Hollywood debut Baywatch in the theatres.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil