»   »  செக்ஸ் விஷயத்தில் ஏடாகூடமான இனவெறியர்: டைட்டானிக் ஹீரோவை திட்டும் பத்திரிக்கை உரிமையாளர்

செக்ஸ் விஷயத்தில் ஏடாகூடமான இனவெறியர்: டைட்டானிக் ஹீரோவை திட்டும் பத்திரிக்கை உரிமையாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி கேப்ரியோ செக்ஸ் விஷயத்தில் ஏடாகூடமானவர், இனவெறி பிடித்தவர் என்று பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையான ஊப்ஸின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸை சேர்ந்த ஊப்ஸ் பத்திரிக்கை தனது மே மாத பதிப்பின் அட்டைப்பக்கத்தில் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி கேப்ரியோவின் குழந்தையை பிரபல பாடகி ரிஹான்னா சுமந்து கொண்டிருக்கிறார். ஆனால் கேப்ரியோவுக்கு அந்த குழந்தை வேண்டாம் என்று உள்ளார் என செய்தி வெளியிட்டது.

இதை பார்த்த கேப்ரியோ கடுப்பாகி நஷ்டஈடு கேட்டு அந்த பத்திரிக்கை மீது வழக்கு தொடர்ந்தார்.

நஷ்டஈடு

நஷ்டஈடு

தன்னைப் பற்றி பொய்யாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கை தனக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர் அளிக்க வேண்டும் என்று கூறி அவர் பிரான்ஸில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு 8 ஆயிரத்து 800 டாலர்கள் வழங்குமாறு பத்திரிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கேப்ரியோ தொடர்ந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றதையும் தெரிவிக்குமாறு பத்திரிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனவெறியர்

இனவெறியர்

வழக்கில் தோல்வி அடைந்த பத்திரிக்கையின் உரிமையாளர் பிரெட்ரிக் ட்ரஸ்கோலஸ்கி கூறுகையில், கேப்ரியோ செக்ஸ் விஷயத்தில் ஏடாகூடமானவர், அவர் இனவெறி பிடித்தவர். அதனால் தான் வழக்கு தொடர்ந்தார் என்றார்.

கருப்பினத்தவர்

கருப்பினத்தவர்

கேப்ரியோ ஆரிய இன பெண்கள் போன்று உள்ளவர்களுடன் மட்டுமே உறவாடுவார். அப்படி இருக்கையில் அவர் கருப்பினத்தைச் சேர்ந்த ரிஹானாவின் குழந்தைக்கு தந்தை என்று நாங்கள் செய்தி வெளியிட்டதை தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார் பிரெட்ரிக்.

எதிர்பார்த்தோம்

எதிர்பார்த்தோம்

இந்த வழக்கில் எங்களுக்கு தோல்வி ஏற்படும் என்று எதிர்பார்த்தோம். பிரான்ஸில் எந்த பத்திரிக்கை பிரபலமானவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி செய்தி வெளியிட்டாலும் உடனே பத்திரிக்கையை தான் கண்டிப்பார்கள் என்று பிரெட்ரிக் கூறினார்.

English summary
French magazine Oops owner Fredric Truskolaski told that Hollywood actor Leonardo Di Caprio is a pervert who has racial issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil