»   »  சகோதரியே... போய் வா... பிராஸ்னன் மகன் உருக்கம்!

சகோதரியே... போய் வா... பிராஸ்னன் மகன் உருக்கம்!

By Sudha
Subscribe to Oneindia Tamil

லண்டன்: தனது சகோதரியின் உயிர் மூச்சின் கடைசித் துளி வரை அருகிலேயே இருந்து அதைப் பார்த்து சோகக் கடலில் மூழ்கியுள்ள நடிகர் பியர்ஸ் பிராஸ்னின் மகன் சீன், தனது அக்காள் சார்லெட்டின் மரணத்திற்கு முன்பு அவருடன் எடுத்துக் கொண்ட படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு சோகத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனின் மூத்த மகள் சார்லெட் எமிலி புற்றுநோய்க்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணத்தால் பிராஸ்னன் குடும்பத்தினர் பெரும் சோகமடைந்துள்ளனர்.

சார்லெட் மீது ரொம்பப் பாசமாக இருந்தவர் அவரது தம்பியான சீன் பிராஸ்னன். மிகுந்த பாசத்துடன் இருந்து வந்த இருவரையும் இப்போது சார்லெட்டின் மரணம் பிரித்திருக்கிறது.

தனது அன்புச் சகோதரியின் மரணத்தால் நிலை குலைந்து போயுள்ளார் சீன். தனது சகோதரியுடன் அவர் மரணமடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட அவர் போட்டோ எடுத்து சந்தோஷப்பட்டுள்ளார். அந்தப் படங்களை இப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சீன்.

நடிகர் சீன்

நடிகர் சீன்

29 வயதான சீன் தனது தந்தையைப் போலவே நடிகர் ஆவார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவரை கிட்டத்தட்ட தனது மகன் போல பாவித்து அன்பைப் பொழிந்து வந்துள்ளார் சார்லெட். இதனால் மற்றவர்களை விட சீன் மீது அதிக பாசம் காட்டியுள்ளார் சார்லெட்.

மெளனத்தால் அஞ்சலி

மெளனத்தால் அஞ்சலி

தனது சகோதரியின் மரணத்தால் மிகவும் சோகமடைந்துள்ள சீன், அதுகுறித்து எந்த இரங்கலையும் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கவில்லை. மாறாக அவருடன் இருந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கடைசி நேரத்தில் எடுத்த போட்டோக்கள்

கடைசி நேரத்தில் எடுத்த போட்டோக்கள்

அதிலும் சார்லெட்டுடன் கடைசி மணித் துளிகளின்போது எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டு அனைவரையும் உருக்கியுள்ளார் சீன்.

ஆயிரம் அர்த்தம் சொல்லும் புகைப்படங்கள்

ஆயிரம் அர்த்தம் சொல்லும் புகைப்படங்கள்

அந்தப் புகைப்படங்கள் குறித்து எந்த வார்த்தையயும் சீன் பயன்படுத்தவில்லை. மாறாக அந்த புகைப்படங்களைப் பார்த்தாலே அவை ஆயிரம் அர்த்தங்களைக் கொடுப்பதாக உள்ளது.. பாசத்தின் மொழியைப் புரிய வைக்கிறது.. கண்கள் பணிக்க வைக்கிறது.

அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்..

அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்..

இந்தப் புகைப்படங்களில் சீனும், சார்லெட்டும் கொடுத்திருக்கும் போஸ்கள், அவர்கள் எந்த அளவுக்கு பாசத்தைப் பொழிந்து சந்தோஷமாக வாழ்ந்துள்னர் என்பதை சொல்லாமல் சொல்கிறது...

மரணம்தான் எவ்வளவு கொடியது....!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: james bond hollywood
    English summary
    Devastated Sean Brosnan today posted pictures of his sister Charlotte taken before she died from the same cancer that killed their mother. The 29-year-old actor and producer didn't pen a message to Charlotte, who died aged 41 on June 28 following a three-year battle with ovarian cancer. However, the pictures he put on his Facebook page said more than a million words and showed the siblings smiling for the camera while Charlotte was quite clearly going through cancer treatment.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more