நோ மீன்ஸ் நோ... நான் வரம்பு மீறியதே இல்லை... பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பிரபல நடிகர் மறுப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: தான் ஒரு போதும் வரம்பு மீறியதே இல்லை என பிரபல ஹாலிவுட் நடிகரான கிறிஸ் நாத், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் நாத். 67 வயதான நடிகர் கிறிஸ் நாத் 1980களில் இருந்து நடித்து வருகிறார்.
கட்டர்ஸ் வே என்ற படத்தில் கிரெடிட் இல்லாத ரோலில் நடித்தார் கிறிஸ் நாத். தொடர்நுது வெய்ட்ரெஸ், ஸ்மிதிரீன்ஸ்., ஆஃப் பீட், தி டெலி, தி புரோக்கன் ஜியான்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மிஸ்டர் பிக் என்ற கதாப்பாத்திரத்தில்..
அவரது நடிப்பில் வெளியான செக்ஸ் அன்ட் தி சிட்டி படம் பெரும் ஹிட்டானது. இதைத்துதொடர்ந்து அந்தப் படத்தின் சீக்குவலாக செக்ஸ் அன்ட் தி சிட்டி 2 என்ற படம் எடுக்கப்பட்டது. இதில் மிஸ்டர் பிக் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் நடிகர் கிறிஸ் நாத்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்..
கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு க்ரானிக்கலி மெட்ரோபாலிட்டன் என்ற படத்தில் நடித்தார். தற்போது ஏ நியூயார்க் கிறிஸ்துமஸ் வெட்டிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிரபலமானவர் நடிகர் கிறிஸ் நாத்.

சர்ச்சைகளில் சிக்கி..
தற்போது தி ஈகூவலைஸர் மற்றும் அன்ட் ஜஸ்ட் லைக் தட் ஆகிய இரண்டு தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் கிறிஸ் நாத்.

பெலோடன் எக்ஸர்ஸைஸ் பைக்
அதாவது அன்ட் ஜஸ்ட் லைக் தட்... தொடரின் முதல் எபிசோடில் நடித்த கிறிஸ் நாத், பெலோடன் எக்ஸர்ஸைஸ் பைக்கில் உடற்பயிற்சி செய்த சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் இறந்துவிடுவது போல் நடித்திருப்பார். இதனால் அதிருப்தியான அந்த உடற்பயிற்சி நிறுவனம் தனது தயாரிப்பின் ஆரோக்கிய நன்மைகளை வலியுறுத்தும் விளம்பரத்தில் நடிக்க வேண்டும் நடிகர் நாத்துக்கு அறிவுறுத்தியது.

பாலியல் வன்கொடுமை புகார்
இந்நிலையில் நடிகர் கிறிஸ் நாத் மீது இரண்டு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினர். அதில் ஒரு பெண் தான் கடந்த 2004ஆம் ஆண்டு 22 வயதாக இருந்தபோது நாத்திடம் ஒரு புத்தகத்தை கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது நாத் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்.

டேட்டிங் சென்றது போது தாக்குதல்
அப்போது ஏற்பட்ட காயத்தால் தான் மருத்துவமனைக்கு சென்றதாகவும் தனக்கு தையல் போடப்பட்டதாகவும் கூறினார். இதேபோல் மற்றொரு பெண் அளித்த புகாரில் 2015ஆம் ஆண்டு நியூயார்க்கில் நாத்துடன் டேட்டிங் சென்றதாகவும் அப்போது அவரது அப்பார்ட்மென்ட்டுக்கு அழைத்து சென்று நாத் தன்னை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

வரம்பை மீறியதில்லை
ஆனால் இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார் நடிகர் கிறிஸ் நாத். இதுதொடர்பாக ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடத்தை தொடர்பு கொண்ட நடிகர் கிறிஸ் நாத் "பல ஆண்டுகளுக்கு முன்பு, பல தசாப்தங்களுக்கு முன்பு கூட நான் சந்தித்த தனிநபர்களால் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கூறியுள்ளார். மேலும் "இந்த கதைகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 30 நாட்களுக்கு முன்பு இருந்திருக்கலாம். இல்லை என்றால் எப்போதும் இல்லை. நான் அந்த வரம்பை மீறியதில்லை என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











