12 இயர்ஸ் எ ஸ்லேவ் பட நடிகர் மைக்கேல் கே வில்லியம்ஸ் மரணம்; ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் கே வில்லியம்ஸ் திடீரென உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தி ஒயர் எனும் டிவி தொடரில் ஓமர் லிட்டில் கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தவர் இவர்.
12 இயர்ஸ் ஸ்லேவ், கான் பேபி கான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மைக்கேல் கே வில்லியம்ஸ்.

ஹாலிவுட் நடிகர் மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் கே வில்லியம்ஸ் காலமானார். அவருக்கு வயது 54. தி ஒயர், தி போர்ட்வாக் எம்பயர் உள்ளிட்ட HBO டிவி தொடர்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். டிவி தொடர்களுக்கு ஈடாக சினிமாவிலும் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

சோகத்தில் ஹாலிவுட்
ஹாலிவுட் நடிகர் மைக்கேல் கே வில்லியம்ஸ் அவரது வீட்டில் இறந்து கிடந்த செய்தியை போலீசார் உறுதி செய்த நிலையில், அந்த தகவல் உலகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவி வருகிறது. ஹாலிவுட் ரசிகர்களை தாண்டி உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

எப்படி இறந்தார்
அமெரிக்க நேரப்படி திங்கட் கிழமை மதியம் 2 மணியளவில் ப்ரூக்ளினில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் மைக்கேல் கே வில்லியம் இறந்து கிடந்ததாக நியுயார்க் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது மரணத்திற்கான உண்மையான காரணத்தை போலீசார் தெரிவிக்கவில்லை.

போதை மருந்து
ஆனால், ஹாலிவுட் மீடியாக்கள் போதைப் பொருள் அதிகளவில் பயன்படுத்தியதால் அதன் டோஸேஜ் அதிகமாகி அவர் இறந்திருக்கக் கூடும் என்றும் ஏகப்பட்ட தகவல்களை தெரிவித்து வருகின்றன. ஆனால், இது தொடர்பாக நியூயார்க் போலீசார் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எச்.பி.ஓ இரங்கல்
சுமார் 20 ஆண்டுகளாக எச்.பி.ஓ குடும்பத்தில் ஒரு நபராக வாழ்ந்து வந்தவர் மைக்கேல் கென்னத் வில்லியம்ஸ். அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த எச்.பி.ஓ. குடும்பத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். தனது சிறந்த நடிப்பால் ஏகப்பட்ட விருதுகளை குவித்த அவரது இழப்பு நிச்சயம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகுக்கும் பேரிழப்பாகவே அமைந்துள்ளது என எச்.பி.ஓ சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











