ஹாலிவுட் ஸ்டார் டாம் குரூஸிடமே கைவரிசை பல லட்சம் மதிப்புள்ள லக்கேஜ்ஜுடன் பிஎம்டபிள்யூ கார் திருட்டு!

லண்டன்: ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் பிஎம்டபிள்யூ கார் திருட்டுப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். ஹாலிவுட் சினிமா உலகில் முக்கிய தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

தற்போது நடிகர் டாம் குரூஸ் மிஷன் இம்பாஸிப்பிள் 7 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.

 டாம் குரூஸின் சொகுசு கார்

டாம் குரூஸின் சொகுசு கார்

படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள டாம் குரூஸ் தன்னுடைய சொகுசு காரான பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அவருடைய பல லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி ஐட்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் லண்டனின் பர்மிங்காம் நகரில் உள்ள கிராண்ட் ஹோட்டலுக்கு வெளியே தனது காரை பார்க் செய்து விட்டு உள்ளே சென்றிருக்கிறார் டாம் க்ருஸ்.

ஸ்கேனர் மூலம் காரை திருடிய திருடர்கள்

ஸ்கேனர் மூலம் காரை திருடிய திருடர்கள்

கிராண்ட் ஹோட்டலில் படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிகிறது. இந்நிலையில் ஹோட்டலுக்கு வெளியே பார்க் செய்யப்பட்ட காரை சாவி இல்லாததால் ஸ்கேனர் பயன்படுத்தி திருடிச் சென்றுள்ளனர். கார் திருடப்பட்ட போது பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் உடமைகள் அதற்குள் இருந்தன.

மின்னணு கண்காணிப்பு கருவி மூலம் மீட்பு

மின்னணு கண்காணிப்பு கருவி மூலம் மீட்பு

திருட்டுப்போன பிஎம்டபிள்யூ கார் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. காரில் மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததால் காரை உடனடியாக கண்டுபிடித்த காவல்துறையினர் அதனை மீட்டுள்ளனர்.

கார் திருடப்பட்டதால் கோபமான டாம் குரூஸ்

கார் திருடப்பட்டதால் கோபமான டாம் குரூஸ்

இருப்பினும் காருக்குள் இருந்த டாம் குரூஸின் உடமைகள் திருடப்பட்டுள்ளன. அவை இன்னும் மீட்கப்படவில்லை. கார் மீட்கப்பட்ட போதும் இந்த சம்பவத்தால் கடும் கோபம் அடைந்தாராம் நடிகர் டாம் குரூஸ். புதன்கிழமை கார் நிறுத்தப்பட்ட இடத்தில் இல்லாமல் போனதை நடிகரின் பாடிகார்ட்ஸ் கவனித்த போதுதான் இந்த திருட்டு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாதுகாப்பு குழுவினருக்கு தர்ம சங்கடம்

பாதுகாப்பு குழுவினருக்கு தர்ம சங்கடம்

கார் திருட்டுப்போனதை அறிந்ததும் தான் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்றுவிட்டதாக நடிகர் டாம் குரூஸ் தெரிவித்துள்ளார். டாம் குரூஸின் கார் திருடப்பட்ட சம்பவம் அவரது பாதுகாப்பு குழுவினருக்கு ஒரு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதை ஓட்டி வந்த ஓட்டுநரும் இந்த சம்பவத்தால் பெரும் நெருடலுக்கு ஆளானார். டாம் குரூஸின் காஸ்ட்லி காரும் உடமைகளும் திருடப்பட்ட சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஷா ஹோட்டலில் சிக்கன் டிக்கா மசாலா

ஆஷா ஹோட்டலில் சிக்கன் டிக்கா மசாலா

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கடந்த வாரம் லண்டனின் பிர்மிங்காம் நகரில் உள்ள ஆஷா போஸ்லேவின் ஹோட்டலில் சாப்பிட்டார். அந்த ஹோட்டலில் சிக்கன் டிக்கா மசாலா ஆர்டர் செய்து சாப்பிட்டார் டாம் குரூஸ். தொடர்ந்து இரண்டாவது பிளேட் சிக்கன் டிக்கா மசாலா ஆர்டர் செய்த டாப் குரூஸ் காரம் கொஞ்சம் கூடுதலாக போடும்படி கேட்டு வாங்கி சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X