»   »  மீண்டும் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு பதில் நான் கையை கிழித்துக் கொள்வேன்: டேனியல் கிரெய்க்

மீண்டும் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு பதில் நான் கையை கிழித்துக் கொள்வேன்: டேனியல் கிரெய்க்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: மீண்டும் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு கண்ணாடி துண்டால் கையை கிழித்துக் கொள்வேன் என்று ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்க் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்க் கடந்த 2006ம் ஆண்டு கசினோ ராயல் படத்தின் மூலம் ஜேம்ஸ் பாண்ட் ஆனார். அதில் இருந்து அவர் இதுவரை நான்கு பாண்ட் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்து முடித்துள்ள பாண்ட் படத்தின் பெயர் ஸ்பெக்டர்.

I’d rather slash my wrists than do another Bond movie: Craig

இந்நிலையில் மீண்டும் பாண்ட் படத்தில் நடிப்பது பற்றி கிரெய்க் கூறுகையில்,

மீண்டும் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு பதிலாக இந்த கண்ணாடியை உடைத்து அதன் துண்டை எடுத்து எனது கையை கிழித்துக் கொள்வேன். தற்போதைக்கு அவ்வளவு தான். நான் முடித்துவிட்டேன். அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புகிறேன் என்றார்.

அண்மையில் தான் அவர் நான் உடல்நலத்துடன் இருக்கையிலேயே இன்னும் ஒரு பாண்ட் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். எட்டு மாதங்களில் ஸ்பெக்டர் படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்திற்காக கிரெய்க் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டில் இருந்துள்ளார்.

கிரெய்க் கடந்த 9 ஆண்டுகளில் நான்கு பாண்ட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Daniel Craig told that he is done with Bond movies and wants to move on. He added that he would slash his wrists than doing another bond movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil