twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜேம்ஸ்பாண்ட்டின் 'நீர்மூழ்கிக் கார்' ரூ.5.47 கோடிக்கு விற்பனை

    By Mayura Akilan
    |

    லண்டன்: ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக்கார் ரூ.5.47 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

    ரோஜர் மூர் கடந்த 1973லிருந்து 1985ஆம் ஆண்டு வரையில் துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த பல திரைப்படங்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன.

    1977ல் வெளிவந்த 'தி ஸ்பை ஹூ லவ்டு மீ' ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட கார் பார்வையாளர்களையும், ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது.

    நீர்மூழ்கி கார்

    நீர்மூழ்கி கார்

    இந்தப் படத்தில் நாயகன் மூரும், பெண் ஜேம்ஸ்பாண்ட் பார்பரா பாக்கும் ஒரு ஹெலிகாப்டர் தாக்குதலில் இருந்து தப்பிக்க நீர்மூழ்கிக் கார் ஒன்றினை உபயோகப்படுத்துவது போல் ஒரு காட்சி உண்டு. இதற்காக, வெள்ளை நிற எஸ்பிரித் கார் ஒன்று நீருக்கடியில் இயங்கும் வகையில் அப்போது மாற்றியமைக்கப்பட்டது.

    லண்டனில் ஏலம்

    லண்டனில் ஏலம்

    தற்போதும் இயங்கும் நிலைமையில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் அந்தக் கார், கடந்த திங்கட்கிழமை அன்று லண்டனில் உள்ள ஆர்எஸ் ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வந்தது. லண்டனை சேர்ந்த ஆர்எம் ஏல நிறுவனம் பெட்டர்சீ பார்க்கில் ஏலம் விட்டது.

    ரூ.5.47 கோடி

    ரூ.5.47 கோடி

    அந்தக் காருக்கான விற்பனை மதிப்பீடு 650,000 பவுண்டுகள் என்று ஏல நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், 550,000 (865,000 டாலர்) பவுண்டிற்கு இந்திய ரூபாயில் 5.47 கோடிக்கு அந்தக் கார் விற்பனையாகியுள்ளது.

    சிறப்பு வசதிகள்

    சிறப்பு வசதிகள்

    இந்த நீர்மூழ்கி கார் அப்போது 1,00,000 டாலர் செலவில் படத்துக்காக சிறப்பு வசதிகளுடன் தயாரிக்கப்பட்டது. இப்போதைய மதிப்புடன் ஒப்பிட்டால் 5,00,000 டாலர்களாக குறிப்பிடப்படுகிறது.

    தண்ணீரிரும், தரையிலும்

    தண்ணீரிரும், தரையிலும்

    தரையில் மணிக்கு 120 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் மிதந்து செல்லும்போது மணிக்கு 6 கிமீ வேகத்திலும், தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும்போது மணிக்கு 3 கிமீ வேகத்திலும் இந்த கார் செல்லும் என்பது சிறப்பம்சமாகும்.

    English summary
    A car that transformed into a submarine in the James Bond movie "The Spy Who Loved Me" has been sold at a London auction for 550,000 pounds (around Rs. 5.47 crore).
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X