Don't Miss!
- News
பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? "அதுக்கு பதிலாக உயிரையே மாய்த்துக் கொள்வேன்" - நிதிஷ் குமார் 'சுறுக்'
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Automobiles
2.5 கோடி இதயங்களை வென்ற மாருதி! டாடா, ஹூண்டாய் எல்லாம் பக்கத்துலகூட வர முடியாது
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
- Technology
பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ஜெனிஃபர் லோபஸ் – பென் அஃப்லெக் டும் டும் டும் : 20 ஆண்டுகள் பிரேக் அப்பை வென்ற தெய்வீகக் காதல்
பிரபல பாடகியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸ் ஹாலிவுட் நடிகரும் தனது முன்னாள் காதலருமான பென் அஃப்லெக்கை 20 ஆண்டுகள் கடந்து திருமணம் செய்துள்ளார். 2002ம் ஆண்டில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த கையோடு, இருவரும் கைகுலுக்கி விடைபெற்றிருந்தனர். இந்த நிலையில், தற்போது காதல் ஜோடிகள் இருவரும் கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் செய்து அதிரடி காட்டியுள்ளனர்.
“சுஷ்மிதா
சென்
பணத்துக்காக
போகிற
ஆள்
இல்ல”:ஷக்கல
பேபிக்கு
முன்னாள்
காதலர்
கொடுத்த
சர்டிபிகேட்!

முதல் காதல் முற்றிலும் கோணல்
2002ம் ஆண்டில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்திய 'Gigli' என்ற ஹாலிவுட் படத்தில் இணைந்து நடித்த ஜெனிஃபர் லோபஸ், பென் அஃப்லெக், தொடர்ந்து 'Jersy Girl' படத்திலும் ஜோடி சேர்ந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் துளிர்விட, அது நிச்சயதார்த்தத்தில் சென்று முடிந்தது. ஆனாலும் திடீரென இருவரும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்று ஹாலிவுட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தினர்.

நிச்சயம் இங்க... கல்யாணம் அங்க...
பிரிந்த வேகத்தில் இருவருமே தங்களுக்கு வேறொரு துணையை தேடிக் கொண்டு திருமணமும் செய்து கொண்டனர். அதே ஆண்டில் ஜெனிஃபர் லோபஸ் மார்க் ஆண்டனியையும், பென் அஃப்லெக் 2005ல் ஜெனிஃபர் கார்னரையும் மணமுடித்துக் கொண்டு புதிய பாதையில் பயணித்தனர். ஆனாலும், இந்த வித்தியாச திருமணங்கள் சில வருடங்களிலேயே தீயில் கருகிய சருகாய் பொசுங்கிவிட, மீண்டும் இருவரும் தனிமையில் வாடி வந்தனர்.

திரும்பவும் முதல்ல இருந்தா
இடைபட்ட காலங்களில் மன்மதனாக ரவுண்டு கட்டிய பென் அஃப்லெக், பிரபல ஹாலிவுட் நடிகையான ஆனா டி ஆர்ம்ஸுடன் டேட்டிங்கில் பிஸியாக இருந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் பொய்யாகிப் போனது. இதனால் ஜெனிஃபர் லோபஸ் - பென் அஃப்லெக் ஜோடி மீண்டும் இணைவார்கள் என கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், உண்மைக் காதல் மெய்யாகிப் போன கதையாக, இருவரும் தற்போது திருமணம் செய்துள்ளனர்.

காதலே இளமையின் ரகசியம்
52 வயதான ஜெனிஃபர் லோபஸும், 49 வயதான பென் அஃப்லெக்கும் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் வெள்ளை நிறத்தில் நீளமான கவுன் அணிந்தபடி தேவதையாக காட்சித் தரும் ஜெனிஃபர் லோபஸ், 'I am feeling Amazing' என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள வீடியோவும் வைரலாகியுள்ளது.