இவ்வளவு காஸ்ட்லி வீடா...காதலருடன் ஜெனிஃபர் லோபஸ் வசிக்க போற வீட்டை பற்றிய கேட்டா அசுந்துடுவீங்க

லாஸ் ஏஞ்சல்ஸ் : ஹாலிவுட்டின் பிரபல நடிகர்களான ஜெனிஃபர் லோபஸ் மற்றும் பென் அஃபிலெக் இருவரும் கடந்த ஆண்டு தங்களின் காதலை உறுதி செய்தனர். தங்களின் உறவு பற்றி இருவருமே மகிழ்ச்சியாக பேட்டிகளில் தெரிவித்தனர்.

மார்க் ஆன்டனி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜெனிஃபருக்கு 14 வயதில் மேக்ஸ் மற்றும் எம்மி என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அலெக்ஸ் ரோட்ரிகுஸ் என்பவருடன் நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்திய ஜெனிஃபர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பென்னுடன் ஒன்றாக இணைந்தார்.

Jennifer Lopez and Ben Affleck to buy USD 50 million Escrow estate

பென்னுக்கு திருமணமாகி ஏற்கனவே வையலெட் 16, செராபினா 13, சாமுவேல் 10 என மூன்று குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி ஜெனிஃபர் கார்னரை விவாகரத்து பெற்ற பென், ஜெனகஃபரை லேபசை காதலிக்க துவங்கினார். இவரும் ஒன்றாக வாழ துவங்கிய பிறகு ரெட் கார்பெட் உள்ளிட்ட பல பொது நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொள்ள துவங்கினர்.

தற்போது இருவரும் தங்களின் குழந்தைகளுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ முடிவு செய்துள்ளனர். இதற்காக பெரிய வீடு ஒன்றை வாங்க இருவரும் திட்டமிட்டு, லாஸ் ஏஞ்சல்ஸின் பெல் ஏர் ஏரியாவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை பேசி முடித்து விட்டனராம். இந்த வீட்டின் மதிப்பு 50 மில்லியன் அமெரிக்க டாலர்களாம்.

Jennifer Lopez and Ben Affleck to buy USD 50 million Escrow estate

இந்த வீட்டின் விலை மட்டுமல்ல இதில் எல்லாமே பிரம்மாண்டம் தான். இந்த வீட்டின் பரப்பளவு 20,000 சதுரடியாம். இதில் 10 பெட்ரூம்கள், 17 பா்ரூம்கள் உள்ளனவாம். பல சமையலறைகள் உள்ளதாம். இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த பிரம்மாண்ட வீட்டில் தியேட்டர், ஜிம், நீச்சல்குளம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளனவாம். கிட்டதட்ட ஒரு பிரம்மாண்ட நகரத்தையே சுற்றி பார்க்கும் உணர்வை இந்த வீடு ஏற்படுத்துமாம்.

இந்த வீட்டில் இருவரும் தங்களின் குழந்தைகளுடன் வாழ முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது ஹாலிவுட் முழுவதும் இவர்கள் வாங்க போகிற வீட்டை பற்றிய பேச்சு தான். பலருள் இவர்கள் வாங்க போகிற வீட்டை பற்றிய விபரங்களையும், அழகையும் கேட்டு ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X