’ஜேக் ஸ்பேரோ’ ரோலில் மீண்டும் நடிக்க ஜானி தீப்பிற்கு ரூ.2355 கோடி சம்பளமா?

நியூயார்க் : உலகப்புகழ் பெற்ற 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் நாயகன் ஜானி தீப், மீண்டும் ஜேக் ஸ்பேரோ ரோலில் நடிக்க அவருக்கு இந்திய மதிப்பில் 2355 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிஸ்னியின் மிக பிரம்மாண்ட தயாரிப்புகளில் ஒன்று 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்'. இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டருக்கும் உலகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் ஜானி தீப் நடித்த கேப்டன் 'ஜேக் ஸ்பேரோ' ரோலுக்கு சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக உள்ளனர்.

இதுவரை 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் ஐந்து பாகங்கள் வெளிவந்துள்ளன. ஆறாவது பாகத்திற்காக உலக சினிமா வட்டாரமே காத்திருக்கிறது. எப்போது படத்தை ஆரம்பிக்க போகிறீர்கள் என அப்டேட் கேட்டு வருகின்றனர்.

பட வாய்ப்பை இழந்த ஜானி தீப் பட வாய்ப்பை இழந்த ஜானி தீப்

பட வாய்ப்பை இழந்த ஜானி தீப் பட வாய்ப்பை இழந்த ஜானி தீப்

ஆனால் ஆறாம் பாகத்தில் நடிக்கவிருந்த ஜானி தீப்ப்புக்கு அந்த வாய்ப்பு ஏறக்குறைய கை நழுவிப் போனது என்றே சொல்லலாம். 2018-ல் பத்திரிகை ஒன்றில் ஜானி தீப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் , ஜானி தீப் பற்றி எழுதிய கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல பட வாய்ப்புகளை ஜானி தீப் இழந்தார்.

முன்னாள் மனைவி மீது வழக்கு

முன்னாள் மனைவி மீது வழக்கு

ஜானி தீப் நடிப்பதாக இருந்த 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் ஆறாவது பாகத்தில் இருந்து, அதன் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியால் நீக்கப்பட்டார். இதுமட்டுமில்லாமல், 'பேன்டஸ்டிக் பீஸ்ட்ஸ் 3' படத்தில் இருந்தும் ஜானி நீக்கப்பட ஆம்பர் ஹெர்டின் கட்டுரை காரணமாக இருந்தது. இதனால் ஆம்பர் மீது ஜானி தீப், அவதூறு வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் இந்த வழக்கில் ஜானி தீப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்புக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்

எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்

டிஸ்னி, ஜானி தீப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்ப்புக்குப் பின்னர் அவரது ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இனி நிச்சயமாக ஜானி தீப் ஆறாவது பாகத்தில் நடிப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வழக்கு நடந்தபோது, "இனி 300 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளமாக கொடுத்தாலும் டிஸ்னியின் படங்களில் நடிக்க மாட்டேன் என ஜானி தீப் கூறியிருந்தார்.

மன்னிப்பு கேட்ட டிஸ்னி

மன்னிப்பு கேட்ட டிஸ்னி

தற்போது டிஸ்னி தனது தவறினை உணர்ந்து, ஜானி தீப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், மேலும் 301 மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் எனவும் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூபாய் 2355 கோடி ஆகும். இதனை ஜானி தீப் ஏற்றாரா இல்லையா என எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.

மீண்டும் ஜேக் ஸ்பேரோ ரோலில் ஜானி தீப்

மீண்டும் ஜேக் ஸ்பேரோ ரோலில் ஜானி தீப்

ஆனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மீண்டும் பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் பாகத்தில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை ஏற்றாவது "கேப்டன் ஈஸ் பேக்" என கடலை மீண்டும் ஆள்வார் எனவும், ஜானி தீப் சர்ப்ரைஸ் தருவார் எனவும் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X