Don't Miss!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- News
ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பேருமே வேட்பாளரை அறிவிக்க மாட்டாங்க.. ‘ட்விஸ்ட்’ இருக்கு.. ஜான் பாண்டியன் சொல்றாரே!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மீண்டும் ஒரு கப்பல் படத்தில் டிகாப்ரியோ.. இது மார்ட்டின் ஸ்கார்சஸியின் வேறலெவல் சம்பவம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் ராபர்ட் டி நிரோ உடன் இணைந்து 'Killers of the Flower Moon' படத்தில் நடித்து வருகிறார் டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ.
விரைவில் அந்த படம் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நாவலைத் தழுவி உருவாகும் படத்திலும் டிகாப்ரியோ ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிகாப்ரியோ நடித்த டைட்டானிக் படத்தைப் போலவே இந்த படமும் கப்பல் மற்றும் படகுகளை மையமாக வைத்த கதை என்கின்றனர்.

7வது முறையாக கூட்டணி
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சஸி உடன் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த அத்தனை படங்களும் ஆஸ்கர் உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகளை தட்டித் தூக்கி இருக்கின்றன. கேங்ஸ் ஆஃப் நியூயார்க், தி ஏவியேட்டர், தி டிபார்டட், ஷட்டர் ஐலாண்ட் மற்றும் தி உல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் உள்ளிட்ட படங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. விரைவில் ஃபிளவர் மூன் திரைப்படமும் தி வேஜர் திரைப்படமும் வெளியாக உள்ளன.

ஃபிளவர் மூன்
மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் ஹாலிவுட்டின் பிரபல ஹீரோ ராபர்ட் டி நீரோ மற்றும் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்து வரும் கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்நிலையில், தி வேஜர் எனும் நாவலைத் தழுவி உருவாக உள்ள படத்திலும் மார்ட்டின் ஸ்கார்சஸி - டிகாப்ரியோ கூட்டணி மீண்டும் இணைகிறது.

மீண்டும் ஒரு டைட்டானிக்கா
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படம் தான் லியோனார்டோ டிகாப்ரியோவை உலகத்திற்கே அறிமுகம் செய்தது. இந்நிலையில், அடுத்தாண்டு வெளியாக உள்ள தி வேஜர் எனும் நாவலை படமாக்கும் உரிமையை கைப்பற்றி உள்ள மார்ட்டின் ஸ்கார்சஸி அந்த படத்திற்கும் டிகாப்ரியோவை நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்திலும், கப்பல் மற்றும் படகுகளில் இருந்து மக்கள் தப்பிக்கும் போது, நடக்கும் வாக்கு வாதங்களும் சூழ்ச்சிகளும் தான் கதை என்கின்றனர்.

ஆப்பிள் தயாரிப்பு
இந்த படத்தை பிரம்மாண்டமாக ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கிறது. தி வேஜர் புத்தகத்தையும் ரிலீஸ் செய்யப் போவது ஆப்பிள் நிறுவனம் தான். 1740களில் நடந்த பீரியட் டிராமாவாக தி வேஜர் திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புத்தகம் ரிலீஸ் ஆனதுமே அடித்து புடித்துக் கொண்டு ஹாலிவுட் ரசிகர்கள் என்ன கதை என்பதை அறிந்து கொள்ள வாங்கி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.