twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Money Heist Season 5… செப்டம்பர் 3 முதல் நெட்ஃப்ளிக்ஸில்… ஹேஷ்டேகுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள் !

    |

    லண்டன் : மனி ஹெய்ஸ்ட் சீசன் 5 இணையத் தொடர் செப்டம்பர் 3ஆம் தேதி அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

    இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் இப்போதே 'மனி ஹெய்ஸ்ட்' குறித்த ஹேஷ்டேகுகளை ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    10 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

    முதல் முறையாக வெப் சீரிஸில் நடிக்கும் மனோ பாலா.. டைட்டிலே டக்கரா இருக்கே! முதல் முறையாக வெப் சீரிஸில் நடிக்கும் மனோ பாலா.. டைட்டிலே டக்கரா இருக்கே!

    மனி ஹெய்ஸ்ட் சீசன்1

    மனி ஹெய்ஸ்ட் சீசன்1

    அலெக்ஸ் பினா என்பவரின் கற்பனையில் உருவான வெப் தொடர்தான் மனி ஹெய்ஸ்ட். ஆண்டெனா 3 என்ற ஸ்பானிய தொலைக்காட்சி சேனலில் லா காஸா டி பாபெல் என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பானது. 15 எபிசோட்களைக் கொண்ட இத்தொடரின் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத் வாங்கி 22 எபிசோட்களாகப் பிரித்து ஒளிபரப்பியது. உலகமெங்கும் வெளியான இந்த தொடர் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் தக்கவைத்துள்ளது.

    வங்கிக்கொள்ளையே கதைக்கரு

    வங்கிக்கொள்ளையே கதைக்கரு

    ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க 8 கொள்ளையர்கள் திட்டதீட்டுகிறார்கள். அந்த 8 பேருக்கும் தலைவனாக செயல்படுகிறான் ப்ரொஃபஸர். ஒரு சிறு சிறு திருட்டில் ஈடுபட்டு போலீஸிடமிருந்து மாட்டிக்கொண்ட ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான் ப்ரொஃபஸர். மேலும் வங்கியை கொள்ளையடிக்க திருடர்களை தேடுகிறான். இதில் 8 திருடர்களைத் தேர்ந்தெடுக்கிறார் ப்ரொஃபஸர். இவர்களுக்கு நகரங்களின் பெயரான டோக்யோ, நைரோபி, டென்வர், ரியோ, மாஸ்கோ, ஓஸ்லோ என்ற பெயரை சூட்டுகிறார் ப்ரொஃபஸர்.

    ஏராளமான ரசிகர்கள்

    ஏராளமான ரசிகர்கள்

    கொள்ளைக்கு முன்பு 5 மாத காலம் அவர்களை ஒரு பெரிய பங்களாவில் தங்க வைத்துப் பயிற்சியளிக்கிறார்.இந்த சுவாரசியமான கதை ஏராளமானவர்களை கவர்ந்தது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சீசன்1 மற்றும் இரண்டு, மூன்று, நான்கு சீசன்கள் வெளியாகின.இதில் 4வது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    மனி ஹெய்ட் சீசன் 5

    மனி ஹெய்ட் சீசன் 5

    மனி ஹெய்ட் சீசன் 5 செப்டம்பர் 3ஆம் தேதி அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் இப்போதே மனி ஹெய்ஸ்ட் குறித்த ஹேஷ்டேகுகளை ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர். 10எபிசோடுகள் கொண்ட தொடரைக்கானமக்கள் இப்போதோ தயாராகத் தொடங்கி விட்டனர்.

    விடுமுறை அளித்த நிறுவனம்

    விடுமுறை அளித்த நிறுவனம்

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த வெர்வ்லாஜிக் என்ற மென்பொருள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக செப்டம்பர் 3 அன்று 'மனி ஹெய்ஸ்ட்' வெளியீட்டை முன்னிட்டு 'நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் சில்' என்ற பெயரில் விடுமுறை அளித்துள்ளது. பலரும் பொய்க் காரணங்கள் கூறி அன்று விடுப்பு எடுப்பதைத் தவிர்க்கவே விடுமுறை அளித்துள்ளதாகவும் தனது அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    English summary
    There are 10 episodes in total in Money Heist season 5. The five episode Volume 1 will be available September 3rd.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X