ஜான்வி கபூர் படத்திற்கு வாழ்த்து சொன்ன நயன்தாரா...எதுக்குன்னு தெரியுமா?
மும்பை : தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மூத்த மகளான ஜான்வி கபூர் 2017 ம் ஆண்டு பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாவனார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இவர் நடித்த குட் லக் ஜெர்ரி படம் சமீபத்தில் ரிலீசானது. இது தமிழில் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய முதல் படமான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆகும். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா லீட் ரோலில் நடித்திருந்தார் ஜான்வி கபூர்.

தமிழில் நயன்தாரா நடித்த ரோலில் தான் இந்தியில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் ப்ரொமோஷனுக்காக ஜான்வி கபூர் அளித்த பேட்டியில், குட்லக் ஜெர்ரி படத்தின் டிரைலரை பார்த்து விட்டு நயன்தாரா பாராட்டியதாக கேள்விப்பட்டேன். உடனடியாக ஜான்வி கபூர் அவரது நம்பரை வாங்கி, அவருக்கு நன்றி தெரிவித்து மெசேஜ் அனுப்பினேன்.
அதற்கு பதிலுக்கு நயன்தாரா, தாடக் படத்தில் உங்களின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. கோலமாவு கோகிலா எப்போதும் என் மனதிற்கு நெருக்கமான படம். நடிப்பில் ஆரம்ப கட்டத்திலேயே உங்களுக்கு இது போன்ற கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு சந்தோஷம், வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.
நயன்தாராவின் இந்த வாழ்த்தை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவரது வாழ்த்து என்னை உற்சாகமாக்கி உள்ளது என்றார் ஜான்வி கபூர். மெசேஜ் மூலம் இவர்கள் பேசிக் கொண்ட விஷயம் பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இதோடு மலையாளத்தில் சில படங்களில் நடித்து வரும் நயன்தாராவிடம் தமிழில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











