உலக அளவில் வசூல் சாதனை படைத்த முதல் ஹாலிவுட் படம் No Time to Die...எவ்வளவு வசூல் தெரியுமா ?

லண்டன் : No Time to Die படம் செப்டம்பர் 28 ம் தேதி லண்டனில் ரிலீஸ் செய்யப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் மூடப்பட்டதால் மற்ற நாடுகளில் தாமதமாகவே ரிலீஸ் செய்யப்பட்டது.

No Time to Die crosses 750 million dollar at Global box office

ஸ்பை படமான இந்த படம் உலக அளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25 வது படைப்பாகும். Eon Productions தயாரித்துள்ள இந்த படத்தை Cary Joji Fukunanga இயக்கி இருந்தார். ஜேம்ஸ் பாண்ட் படம் ஒன்றை Universal Pictures விநியோகம் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.இந்த படம் இத்தாலி, ஜமைக்கா, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது.

Daniel Craig, 007 ரோலில் நடித்திருந்தார். ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே மோசம் என்ற நிலையில் இருந்து பெஸ்ட் என நிலைக்கு உயர்ந்த படம் இது தான். அந்த அளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சுவாரஸ்யம் குறைவு என்ற விமர்சனத்தையே இந்த படம் பெற்றது. ஆனால் தற்போது வசூலில் சாதனை படைத்துள்ளது.

ஜமைக்காவின் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜேம்ஸ் பாண்டிடம் அவரது பழைய சிஐஏ நண்பர் ஒருவர் உதவி கேட்கிறார். மர்ம நபர்களால் கடத்தப்பட்ட விஞ்ஞானியை, ஆபத்தான புதிய தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் வில்லனிடம் இருந்து மீட்பது தான் படத்தின் கதை.

2019 ம் ஆண்டு நவம்பர் மாதமே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக தொடர்ந்து தள்ளி போனது. இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு வெளியிடப்பட்டாலும் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளி குவித்துள்ளது No time to die படம். பாசிடிவ் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

No Time to Die படம் உலக அளவில் 758 மில்லியன் டாலர்களை கடந்து வசூல் படைத்துள்ளது. உலக அளவில் 750 மில்லியன் டாலர் வசூலை கடந்த முதல் ஹாலிவுட் படம் இது தானாம். 2021 ம் ஆண்டில் அதிக வசூலை பெற்ற மூன்றாவது ஹாலிவுட் படமும் இது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X