twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விண்வெளியில் இந்த படம் தான் முதலில் படமாக்கப்படுகிறது.. டாம் க்ரூஸை முந்திய ரஷ்ய படக்குழு!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: கிராவிட்டி, இன்டர்ஸ்டெல்லார், அவதார் ஏன் நம்ம ஊர் டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்கள் எல்லாம் விண்வெளி செட்டை சிஜியில் போட்டு படமாக்கி வந்த நிலையில், விண்வெளிக்கே சென்று படம் எடுக்கப் போகிறேன் என பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் அறிவித்து இருந்தார்.

    ஆனால், அவருக்கு முன்னதாக விண்வெளியில் ஷூட்டிங் செய்ய ரஷ்ய படக்குழு ஒன்று இன்று விண்வெளிக்கே கிளம்பி விட்டது.

    அரண்மனை 3 படத்திலிருந்து 4வது சிங்கிள் ரெடி... ரிலீஸ் தேதி இதோ!அரண்மனை 3 படத்திலிருந்து 4வது சிங்கிள் ரெடி... ரிலீஸ் தேதி இதோ!

    ரஷ்ய இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ (Klim Shipenko) தனது படக்குழுவுடன் விண்வெளிக்கே கிளம்பிய புகைப்படங்கள் உலகத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    நிலவுக்கு சென்றதே

    நிலவுக்கு சென்றதே

    நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றதே சிஜி மாயாஜாலம் தான் என ஏகப்பட்ட கட்டுக்கதைகள் கூறப்பட்டு வருகின்றன. ஹாலிவுட் படங்களில் எல்லாம் விண்வெளி, வேற்று கிரகம், மல்டி யூனிவர்ஸ் என வித்தை காட்டு வருவது எல்லாம் இந்த சிஜி எனும் மாயாஜாலத்தை வைத்துத் தான். க்ரீன் மற்றும் ப்ளூ மேட்களை கொண்டு வித விதமாக பிரம்மாண்டங்களை படைத்து வருகின்றனர்.

    டாம் க்ரூஸின் ஆசை

    டாம் க்ரூஸின் ஆசை

    சிஜி இல்லாமல் ரியல் விமானத்தில் தொங்கியபடி ஏகப்பட்ட மிஷன் இம்பாசிபிள் காட்சிகளில் நடித்து முடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் விண்வெளியிலேயே படத்தின் ஷூட்டிங்கை நடத்தினால் எப்படி இருக்கும் என நினைத்து அந்த ரியல் பிரம்மாண்டத்தை ரசிகர்களுக்கு காட்டப் போவதாக நாசாவுடன் இணைந்து அறிவித்து இருந்தார்.

    தாமதமாக்கிய கொரோனா

    தாமதமாக்கிய கொரோனா

    ஆனால், அவரது கனவை கொரோனா வைரஸ் சற்றே தாமதமாக்கியது. ஏற்கனவே அவர் நடித்துக் கொண்டிருக்கும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் புதிய பாகத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக பல முறை தடைப்பட்ட நிலையில், விண்வெளி பயணத்தை இன்னமும் ஆரம்பிக்காமல் உள்ளார் டாம் க்ரூஸ்.

    முந்திய ரஷ்ய படக்குழு

    முந்திய ரஷ்ய படக்குழு

    டாம் க்ரூஸ் சொன்னதை ரஷ்ய படக்குழுவினர் செய்து முடிக்க அவருக்கு முன்னதாகவே இன்று விண்வெளிக்கு புறப்பட்டு சென்று உள்ளனர். நாசாவுக்கு முன்னதாக இப்போதும் ரஷ்யாவின் ராஸ்காஸ்மாஸ் போட்டியிட்டு கஜகஸ்தானில் இருந்து அக்டோபர் 5ம் தேதியான இன்று இந்திய நேரப்படி மதியம் 2.25 மணிக்கு ராக்கெட்டில் விண்வெளிக்கு கிளம்பி விட்டனர்.

    ரஷ்ய இயக்குநர்

    ரஷ்ய இயக்குநர்

    ரஷ்யாவை சேர்ந்த பிரபல இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ The Challenge எனும் படத்தை விண்வெளியில் உள்ள ரியல் ஸ்பேஷ் ஸ்டேஷனிலேயே படமாக்க திட்டமிட்டு விண்கலத்தில் ஏறி தனது படக்குழுவினருடன் பறந்து சென்றுள்ளார். நடிகை யூலியா பெரிசில்ட் தனது படப்பிடிப்புக்காக விண்வெளிக்கு இயக்குநருடன் சென்றுள்ளது ஒட்டுமொத்த திரையுலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    முதல் நடிகை

    முதல் நடிகை

    35 முதல் 40 நிமிடங்கள் படத்தில் இடம்பெறக் கூடிய விண்வெளி ஆராய்ச்சி நிலைய காட்சியில் முதல் நடிகையாக யூலியா பெரிசில்ட் (Yulia Peresild) நடிக்க உள்ளார். ஏவியேஷனில் எந்தவொரு அனுபவமும் இல்லாத அவருக்கு சில மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னரே அழைத்துச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் இரு விண்வெளி வீரர்களே படத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Not Tom Cruise: Russian Film maker starts his journey today for the First Film in Space with Russian Rocket and movie crew.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X