»   »  வேற்று கிரகவாசிகள் தாக்குதல்... பூமியிலிருந்து எல்லோரையும் காப்பாற்றி இன்னொரு கிரகத்துக்கு..

வேற்று கிரகவாசிகள் தாக்குதல்... பூமியிலிருந்து எல்லோரையும் காப்பாற்றி இன்னொரு கிரகத்துக்கு..

By Chakra
Subscribe to Oneindia Tamil

பூமி இருக்கிறது... அழிந்து போன ஊர்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு மனிதன் கூட இல்லை. எல்லோரும் வேறு கிரகத்துக்கு குடியேறியாகி விட்டது. நினைத்துப் பார்த்தாலே முதுகுத் தண்டில் கொஞ்சம் ஜில்லடிக்கவில்லை?

ரூ. 700 கோடியில் தயாரான ஓப்லிவியன்

ரூ. 700 கோடியில் தயாரான ஓப்லிவியன்

உலகம் அழியுறது, உலகத்தை வேற்று கிரகவாசிகள் தாக்குவது போன்ற சப்ஜெக்டுகள் ஹாலிவுட் ஆசாமிகளுக்கு தாமிரபரணி தண்ணியில் செய்த லாலா கடை ஒரிஜினல் அல்வாவை சாப்பிடுவது மாதிரி. அந்த வகையில் ரேடிகல் ஸ்டுடியோசும் செர்னின் எண்டர்டெயின்மெண்டும் இணைந்து சுமார் ரூ. 700 கோடி செலவில் உருவாக்கியுள்ள படம் ஓப்லிவியன் (Oblivion).

'வார் ஆப் த வோர்ல்ட்' படத்தில் சண்டை போட்ட டாம் க்ரூயிஸ்:

'வார் ஆப் த வோர்ல்ட்' படத்தில் சண்டை போட்ட டாம் க்ரூயிஸ்:

இந்தப் படத்தின் ஹீரோ டாம் க்ரூயிஸ் தான். ஏற்கனவே ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் 'வார் ஆப் த வோர்ல்ட்' படத்தி்ல் வேற்று கிரகவாசிகளுடன் சண்டை போட்டவர் தான் க்ரூயிஸ். ஓப்லிவியன் படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தான் ரிலீசாகப் போகிறது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள டிரைலரே எல்லோரையும் மிரட்டுகிறது.

60 ஆண்டுகளுக்குப் பின்...

60 ஆண்டுகளுக்குப் பின்...

இன்றிலிருந்து 60 ஆண்டுகளுக்குப் பின் பூமியை ஸ்கேவ்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்த வேற்றுகிரகவாசிகள் வந்து தாக்குகின்றனர். இரு தரப்பும் இடையே பெரும் போர் நடக்கிறது. சாரை சாரையாய் வேற்று கிரகத்திலிருந்து வந்து சேரும் விண்கலங்களில் இருந்து வந்து தாக்கும் மகா ஆயுதங்கள், அணு குண்டுகளை விட பெரும் சக்தி வாய்ந்த குண்டுகள் பூமியின் எல்லா பகுதியையும் தாக்குகின்றன. திருப்பி அடிக்கின்றன எல்லா நாடுகளும். கிட்டத்தட்ட 10 ஆண்டு போர் நடக்கிறது.

மனிதர்கள் வெல்கிறார்கள்:

மனிதர்கள் வெல்கிறார்கள்:

போரின் முடிவில் மனித இனமே வெல்கிறது. ஆனால், இனி இந்த பூமியால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்ற அளவுக்கு இங்கே பெரும் அழிவு ஏற்பட்டு விடுகிறது. ஒரு புல் கூட முளைக்காது என்ற அளவுக்கு உலகின் மீது ரசாயான தாக்குதல்கள் நடந்து விடுகின்றன.. அப்படி ஒரு நிலையில்...

வேற்று கிரகத்தில் குடியேறுகின்றனர்:

வேற்று கிரகத்தில் குடியேறுகின்றனர்:

இந் நிலையில் மனிதர்களை எல்லாம் இன்னொரு கிரகத்தில் குடியேற்றுகின்றன நாடுகள். இதற்கு நாஸாவும் அமெரிக்காவும் முன் நின்று உதவுகின்றன. லட்சக்கணக்கான விண்கலங்களில் கோடிக்கணக்கான மக்கள் வேற்று கிரகங்களுக்கு குடியமர்த்தப்பட்டு விடுகின்றனர். ஆனாலும், பூமியில் இருந்து ஏதாவது தேறுமா என்று பார்ப்பதற்கு ஒரு டீம் வந்து சேருகிறது. அதன் தலை தான் டாம் க்ரூயிஸ்.

வந்த இடத்தில் ஒரு கும்பல்..

வந்த இடத்தில் ஒரு கும்பல்..

அழிந்து போன நியூயார்க் நரகத்தில் இந்தக் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கையில், அங்கே மோர்கன் ப்ரீமேன் தலைமையில் ஒரு சிறிய குழு வேற்றுகிரக வாசிகளுடன் கொரில்லா போரில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறார் க்ரூயிஸ். இடையே இன்னொரு விண்கலத்தில் பூமிக்கு வந்து அது தரையில் மோதி காயம்பட்ட ஹீரோயின் ஒல்கா க்யூரிலென்கோவை (ஜேம்ஸ்பாண்டின் குவாண்டாம் ஆப் சோலாஸ் பட ஹீரோயினாக வருவாரே அவரே) காப்பாற்றுகிறார் க்ரூயிஸ்.

மீண்டும் மோதல்..

மீண்டும் மோதல்..

க்ரூயிஸ் அன்ட் கோ மீது வேற்றுகிரகவாசிகள் தாக்குதலைத் தொடுக்க அவர் மீண்டு புதிய கிரகத்துக்கு பத்திரமாக போய்ச் சேருகிறாரா என்பதே மீதிக் கதை. Tron என்ற வரலாற்றுப் படத்தை இயக்கிய ஜோசப் கோசின்ஸ்கி தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். முன்பு ஓப்லிவியன் என்ற பெயரில் இவர் எழுதிய காமிக்ஸ் கதையைத் தான் படமாக மாற்றியிருக்கிறார் ரூ. 700 கோடியில்.

ஹைடெக் ஆச்சரியங்கள்:

ஹைடெக் ஆச்சரியங்கள்:

அடுத்த 50 ஆண்டுகளில் வரப் போகும் தொழில்நுட்பங்கள், வேற்றுகிரக விண்கலன்கள், மிக நவீன ஆயுதங்கள், விண்ணில் நடக்கும் அதிவேக சேஸ்கள்-மோதல்கள் என படம் முழுவதுமே ஹைடெக் ஆச்சரியங்கள் தான். காத்திருப்போம் ஏப்ரல் வரை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    In the trailer for Tom Cruise's new sci-fi thriller, Oblivion, the action star announces that 'Everyone's been evacuated, nothing human remains' on the desolate planet. 'Sixty years ago, Earth was attacked,' the 50-year-old is heard saying. 'We won the war, but they destroyed half the planet.'

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more