»   »  ஹாலிவுட் போகும் பிரியங்கா சோப்ரா: படம் அல்ல டிவி சீரியல்

ஹாலிவுட் போகும் பிரியங்கா சோப்ரா: படம் அல்ல டிவி சீரியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் டிவி சீரியலில் நடிக்க உள்ளார்.

2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு அவர் நடிகையாகிவிட்டார். 32 வயதாகும் பிரியங்கா சோப்ரா பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.

பிரியங்கா நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏபிசி ஸ்டுடியோஸ்

ஏபிசி ஸ்டுடியோஸ்

ஹாலிவுட்டில் பிரபலாக உள்ள ஏபிசி ஸ்டுடியோஸ் புதிய டிவி சீரியலுக்கான கதையை தயார் செய்துள்ளது. இந்நிலையில் அந்த சீரியலில் நடிக்குமாறு ஏபிசி நிறுவனம் பிரியங்கா சோப்ராவை அணுகியது.

பிரியங்கா

பிரியங்கா

ஹாலிவுட் டிவி சீரியலில் நடிக்க பிரியங்கா சோப்ரா சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஓராண்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம்.

ஹீரோயின்

ஹீரோயின்

படங்களில் மட்டும் அல்ல டிவி சீரியலிலும் பிரியங்கா தான் ஹீரோயின். ஏபிசி நிறுவன சீரியல் கதை பிரியங்காவை சுற்றியே நகருமாம்.

முதல் இந்தியர்

முதல் இந்தியர்

ஹாலிவுட் டிவி சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ள முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

நிம்ரத் கௌர்

நிம்ரத் கௌர்

முன்னதாக லஞ்ச் பாக்ஸ் படத்தின் ஹீரோயின் நிம்ரத் கௌர் ஹோம்லேண்ட் என்ற ஹாலிவுட் சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் சீரியலில் அவர் ஹீரோயின் கிடையாது.

English summary
Priyanka Chopra will soon be seen in one of the leading Hollywood studios ABC's serial and that too in a lead role.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil