»   »  வசூல் வேட்டையில் 'ஜுராசிக் வேர்ல்'ட்டை புரட்டி எடுத்த 'ஸ்டார் வார்ஸ் 7'!

வசூல் வேட்டையில் 'ஜுராசிக் வேர்ல்'ட்டை புரட்டி எடுத்த 'ஸ்டார் வார்ஸ் 7'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: இந்த ஆண்டில் அதிக வசூல் புரிந்த ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்தின் சாதனையை உடைத்திருக்கிறது ஸ்டார் வார்ஸ் 7 தி போர்ஸ் அவெக்கன்ஸ் திரைப்படம்.

ஜுராசிக் வேர்ல்ட்டின் முதல் 3 நாட்கள் சாதனையை முறியடிக்க ஸ்டார் வார்ஸ் தவறி விட்டது என்று விமர்சகர்கள் கூறிய நிலையில், தற்போது முதல் 13 நாட்களில் ஜுராசிக் வேர்ல்ட் நிகழ்த்திய சாதனையை ஸ்டார் வார்ஸ் முறியடித்துள்ளது.

Star Wars box office collection crossed 1 billion

ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் வெளியான முதல் 13 நாட்களில் 1 பில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது. இதுவரை முறியடிக்கப் படாமல் இருந்த இந்த சாதனையை தற்போது ஸ்டார் வார்ஸ் 7 திரைப்படம் முறியடித்துள்ளது.

வெளியான முதல் 12 நாட்களில் 1 பில்லியன் டாலர்களை வசூலித்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது ஸ்டார் வார்ஸ் 7 திரைப்படம்.

ஜே.ஜே.ஆப்ராம்ஸ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் ஹாரிசன் போர்ட், மார்க் ஹமில், கேரி பிஷெர், ஆடம் டிரைவர், டெய்சி ரிட்லி உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர்.

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் இந்தியாவில் வெளியான ஸ்டார் வார்ஸ் இங்கும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. மேலும் வருகின்ற 9ம் தேதி சீனாவில் ஸ்டார் வார்ஸ் வெளியாகிறது.

சீனாவிலும் ரசிகர்களின் அமோக ஆதரவு படத்திற்கு இருப்பதால் மேலும் பல்வேறு சாதனைகளை ஸ்டார் வார்ஸ் 7 நிகழ்த்தும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

English summary
Box Office: The latest Star Wars: The Force Awakens crossed the $1 billion mark in ticket sales which is faster than any other movie till date.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil