»   »  அவதாரை மிஞ்சி வசூலில் உலக சாதனை படைக்குமா- ஸ்டார் வார்ஸ் 7?

அவதாரை மிஞ்சி வசூலில் உலக சாதனை படைக்குமா- ஸ்டார் வார்ஸ் 7?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: இதற்கு முன் வெளி வந்து வசூலில் சாதனை படைத்த ஸ்டார் வார்ஸ் படங்களை விட விரைவில் வெளிவர இருக்கும் ஸ்டார் வார்ஸ் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை படைக்கும் என்று ஹாலிவுட் நிபுணர்கள் கருத்த தெரிவித்து உள்ளனர்.

ஸ்டார் வார்ஸ் பட வரிசையில் 7வது படமாக தி போர்ஸ் அவேக்கன்ஸ் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.

இந்தப் படம் வசூலில் பெரும் சாதனைகள் படைக்கும் என்று இப்போதே ஹாலிவுட்டில் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

டிசம்பர் 18ம் தேதி வெளி வர இருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது அனைவரின் கவனத்தையும் கவர்ந்து படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகமாக்கி உள்ளது .

டிசம்பர் மாத ரிலீஸ்:

டிசம்பர் மாத ரிலீஸ்:

தி போர்ஸ் அவேக்கன்ஸ் படத்தை டிசம்பர் மாத இறுதியில் வெளியிட உள்ளனர். இதற்கு முன் எந்த படமும் செய்யாத அளவுக்கு இப்படம் வசூலில் புதிய புரட்சியை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.

நடிக நடிகையர்:

நடிக நடிகையர்:

ஹாரிசன் போர்ட், மார்க் ஹமில் மற்றும் கேரி பிஷேர் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 18ம் தேதி அமெரிக்காவில் வெளியாக உள்ளது.

புதிய சாதனை படைக்கும்

புதிய சாதனை படைக்கும்

இதுகுறித்து திரையுலக ஆய்வு நிபுணர் ரேன் தரக் கூறுகையில், டிசம்பர் மாதம் வெளியாகும் எந்த ஒரு படமும் வசூலில் சாதனை படைத்ததில்லை என்ற நிலையை இப்படத்தின் வெற்றியானது மாற்றிக் காட்டும் என்று நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

அவதார்

அவதார்

அவதார் என்று ஒரு படம் வந்ததே ஞாபகம் இருக்கிறதா? நம்ம தமிழ் நாட்டில் கூட இப்படத்தை விழுந்து விழுந்து ரசித்ததும், இதன் தாக்கத்தில் நிறைய பேர் படம் எடுத்து கையை சுட்டக் கொண்டார்களே? அதே அதேதான்.

அதையும் மிஞ்சும்

அதையும் மிஞ்சும்

அப்படிப்பட்ட, உலக அளவில் அதிரிபுதிரியாக ஓடி வசூல் செய்த அவதார் படத்தை விடவும் இப்படம் வசூல் ரீதியாக முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவதாரின் சிறப்பம்சம்

அவதாரின் சிறப்பம்சம்

அவதாரின் சிறப்பே படத்தின் காட்சிகளும் அதனை சூழ்நிலைப் படுத்தி இருக்கும் விதமும் தான். அந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் விதமாக கையாளப் பட்டிருக்கும் .

புரட்சி படைக்குமா தி போர்ஸ்

புரட்சி படைக்குமா தி போர்ஸ்

தி போர்ஸ் அவேக்கன்ஸ் படம் அவதாரின் வசூலை முறியடித்து வசூலில் புரட்சியை ஏற்படுத்துமா? என்ற கேள்வி உங்களைப் போலவே நமக்குள்ளும் எழுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Will The Force Awakens movie beat Avathar in Hollywood box office?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil