நெஞ்சு ரொம்ப கனமா இருக்கு.. கொஞ்சம் பரவாயில்லை.. சூப்பர் கேர்ள் நடிகையையும் விடாத கொரோனா
லாஸ் ஏஞ்சல்ஸ்: வெப் சீரிஸ் தொடரான சூப்பர் கேர்ள், தி சொசைட்டி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஒலிவியா நிக்கேனனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 14ம் தேதி ஒலிவியாவுக்கு 102 டிகிரி ஜுரம் ஏற்பட்டுள்ளது. உடல் வலி, அதிகளவில் சளி மற்றும் இருமல் அவரை போட்டு வாட்டி வதைத்தது.

மார்ச் 16ம் தேதி வாசனைகளை நுகரும் திறனும் சுவை உணர்வதிலும் பாதிப்பு ஏற்படவே, கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.
View this post on InstagramA post shared by Olivia Nikkanen (@olivianikkanen) on
மார்ச் 20ம் தேதி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உணர்ந்து கொண்ட சூப்பர் கேர்ள் நடிகை கடந்த 16 நாட்களாக, தனது அம்மாவுடன் அப்பார்ட்மென்ட் ஒன்றில் தனிமைப்பட்டு கிடப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on InstagramA post shared by Olivia Nikkanen (@olivianikkanen) on
16 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை உணர்கிறோம். ஆனால், நெஞ்சு பகுதி தான் ரொம்ப கனமா இருக்கு, சீக்கிரமே அதுவும் சரியாகி விடும் என நம்புகிறேன் என தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நடிகை ஒலிவியா நிக்கென்னா பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து சீக்கிரமே குணமாகி வருவீர்கள் என ரசிகர்கள் பலர் அவருக்கு நம்பிக்கையை அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











