»   »  இப்போதும் துளிர்த்திருக்கும் டைட்டானிக் காதல்!

இப்போதும் துளிர்த்திருக்கும் டைட்டானிக் காதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ் : உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன, காலத்தால் அழியாத காதல் காவியம் 'டைட்டானிக்'. ஜாக் - ரோஸ் என்ற அந்தக் காதல் கதாபாத்திரங்களை, இத்தனை வருடம் கழித்தும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்குக் கவலைப்பட்டவர்களை விட, இந்த ஜோடி பிரிந்ததற்குக் கவலைப்பட்டவர்கள் தான் அதிகம். இந்த நிலையில் இந்த கதாபாத்திரங்களில் நடித்த கேத் வின்ஸ்லெட் மற்றும் டி-காப்ரியோ ஆகியோர்களை காலம் வெவ்வேறு பாதையில் பயணிக்க வைத்தாலும், இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

Titanic lovers are reunite

இப்போது டி-காப்ரியோவுக்கு 42 வயது. கேத் வின்ஸ்லெட்டுக்கு 41 வயது. இருவரும் 20 ஆண்டுளாக அவ்வப்போது சந்தித்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் தெற்கு ஸ்பெயினில் நடந்த சுற்றுப்புற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மாநாட்டில், கேத் வின்ஸ்லெட் மற்றும் டி-காப்ரியோ கலந்து கொண்டனர்.

Titanic lovers are reunite

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் கேத் வின்ஸ்லெட்டை, டி-காப்ரியோ தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் நீச்சல் உடையில் தங்களது 20 ஆண்டு கால மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்களாம்.

English summary
Titanic fame leonardo dicaprio and kate winslet are reunite. They shared their 20 years of memories with each other.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil