»   »  18 வருஷமானாலும்... 'டைட்டானிக்'கின் இந்த சாதனையை "கவிழ்க்க" முடியலையே!

18 வருஷமானாலும்... 'டைட்டானிக்'கின் இந்த சாதனையை "கவிழ்க்க" முடியலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளில், டைட்டானிக் படத்தின் 18 வருட சாதனை இன்னும் முறியடிக்கப்படாமலேயே உள்ளது.

டைட்டானிக் படம் உலகளவில் உள்ள ரசிகர்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கமானது, இன்றளவும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

அதேபோல இப்படம் ஆஸ்கர் விருதுகளில் செய்த சாதனை ஒன்று 18 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்து வருகிறது.

டைட்டானிக்

டைட்டானிக்

20 வருடங்கள் தவமிருந்து இந்த வருடம் ஆஸ்கர் விருதை வாங்கிய லியார்னடோ டிகாப்ரியோ தான் டைட்டானிக் படத்தின் நாயகன். டிகாப்ரியோவுடன் இணைந்து கதே வின்ஸ்லெட் நடித்திருந்த இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து, இயக்கியிருந்தார். சரியாக 19 வருடங்களுக்கு முன் வெளியான இப்படம் படத்தின் பட்ஜெட்டைவிட 10 மடங்கு வசூலைக் குவித்து சாதனை புரிந்தது.

ஆஸ்கர் விருதுகள்

ஆஸ்கர் விருதுகள்

வசூல் மட்டுமின்றி விருதுகளிலும் டைட்டானிக் எந்தக் குறையும் வைக்கவில்லை. இப்படம் வாங்கிக் குவித்த விருதுகளை பட்டியலிட ஆரம்பித்தால் முழுதாக ஒருநாள் போதாது. விருதுகளை வாரிக்குவித்த டைட்டானிக் படத்தின் ஆஸ்கர் விருதுகள் மற்றும் ஆஸ்கரில் இன்னும் முறியடிக்கப்படாத இப்படத்தின் சாதனைகளை இங்கே காணலாம்.

அதிக பரிந்துரை

அதிக பரிந்துரை

ஆஸ்கர் விருதுகளில் அதிகம் பரிந்துரை செய்யப்பட்ட படம் என்ற பெருமையை இப்படம் இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிறந்த படம் சிறந்த இயக்குநர் உட்பட மொத்தம் 14 பிரிவுகளில் இப்படம் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு முன் 1950 ம் ஆண்டு வெளியான ஆல் அபௌட் எவே என்னும் படம் அதிகபட்சமாக 14 பிரிவுகளில் பரிந்துரை செய்யபட்டிருந்தது. என்றாலும் டைட்டானிக் படத்திற்குப் பின் வேறு எந்தப் படமும் இவ்வளவு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

18 வருடங்கள்

18 வருடங்கள்

இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளில் டைட்டானிக் படத்தின் 18 வருட சாதனை இன்னும் முறியடிக்கப்படாமலேயே உள்ளது. அதேபோல 88 வருட ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் அதிக விருதுகளை வென்ற படம் என்ற சாதனையையும் டைட்டானிக் படைத்திருக்கிறது. இதுவரை பென்ஹர்(1959), டைட்டானிக்(1997) மற்றும் தி லார்ட் ஆப் தி ரிங்: தி ரிட்டர்ன் ஆப் தி கிங்(2003) ஆகிய 3 படங்கள் மட்டுமே அதிகபட்சமாக 11 விருதுகளை வென்றிருக்கின்றன. 2003 ம் ஆண்டிற்குப் பின் வேறு எந்தப் படமும் இவ்வளவு விருதுகளை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டைட்டானிக் காலத்தால் அழியாத காவியம்...

English summary
'Titanic' the most Nominated Film in 70th Oscar Awards. Till now The Record not Broken by Any Movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil