»   »  சூப்பர் ஸ்டாருடன் நடிக்கப் போகிறேனே: மகிழ்ச்சியில் துள்ளும் தீபிகா படுகோனே

சூப்பர் ஸ்டாருடன் நடிக்கப் போகிறேனே: மகிழ்ச்சியில் துள்ளும் தீபிகா படுகோனே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கப் போவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் வெற்றி நாயகியான தீபிகா படுகோனே ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு பெயர்போன வின் டீசலின் XXX படத்தில் நடிக்கிறார் தீபிகா. இதற்காக தீபிகா இன்று இரவு அமெரிக்கா கிளம்புகிறார்.

வின் டீசல் பற்றி தீபிகா கூறுகையில்,

வின் டீசல்

வின் டீசல்

சூப்பர் ஸ்டார் வின் டீசலுடன் நான்கு முறை தான் பேசியுள்ளேன். நான் ஏற்கனவே பணியாற்றிய நடிகர்களை போன்று பெரிய மனதுடையவராக உள்ளார். நான் ஹாலிவுட்டில் ரசித்து நடிப்பேன் என்று நினைக்கிறேன். செய்யும் வேலையை ரசித்து செய்தால் பின்பு அனைத்து வரும்.

சம்பளம்

சம்பளம்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் வழங்காத பிரச்சனை இருந்தது. தற்போது அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.

பாஜிராவ் மஸ்தானி

பாஜிராவ் மஸ்தானி

பாஜிராவ் மஸ்தானி படத்தில் ஹீரோ ரன்வீர் சிங்கிற்கு இணையாக எனக்கு சம்பளம் கிடைக்காமல் இருந்திருக்கலாம். எனக்கு தெரியவில்லை என்று நைசாக நழுவிவிட்டார் தீபிகா.

ரன்வீர்

ரன்வீர்

தீபிகா பற்றி அவரது காதலரும், நடிகருமான ரன்வீர் சிங் கூறுகையில், உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம் தீபிகா. ஹாலிவுட் படத்தில் நடிக்க இன்று இரவு அமெரிக்கா கிளம்பும் உங்களுக்கு வாழ்த்துக்கள். புதிய முயற்சியில் வென்று எங்களை எப்பொழுதும் போன்று பெருமையடைய செய்வீர்களாக என்றார்.

English summary
Deepika Padukone is off to shoot her debut Hollywood outing "XXX: The Return of Xander Cage" and the actress says she is going to enjoy the experience of working with superstar Vin Diesel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil