கணவரை பறிகொடுத்தேன்.. 3 முறை தற்கொலைக்கு முயன்றேன்.. நடிகை கவிதா கண்ணீர் பேட்டி!
சென்னை: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து பெயர் எடுத்தவர் நடிகை நடிகை கவிதா. திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த நடிகை கவிதா. விலகியதற்கான காரணங்களை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
1970 மற்றும் 80-களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கவிதா, தனது பத்தாவது வயதிலேயே தெலுங்குத் திரைப்படமான "சிரஞ்சீவி ராம் பாபு" மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, ஜெனரல் சக்கரவர்த்தி, நீயா, எல்லாம் இன்பமயம், நாடோடித்தென்றல், செந்தமிழ்ப்பாட்டு, நாளைய தீர்ப்பு, அமராவதி என 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் "அவள் ஒரு பச்சைக் குழந்தை", "ஆயிரம் ஜென்மங்கள்", "காயத்ரி" போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை கவிதா: 18வது வயதில் திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்திற்குப் பிறகு சினிமா வாழ்க்கையில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்ததும், எனது குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. என் குழந்தைகளுக்கு சமைக்க வேண்டும், அவர்களைப் பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டும் என பல கடமைகள் இருந்தன. ஆனால், என் கணவருக்கு நான் திரைப்படங்களி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், என கவனம் முழுவதுமாக குழந்தைகள் மீதும், அவர்களது வளர்ப்பு மீதும் இருந்தது. இதனால், நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்கு குழந்தைகளை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. தொடர்ந்து, என் குழந்தைகளை நான் கவனித்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தேன். இதனால், படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதில் இருந்து ஒதுங்கினேன்.
தற்கொலைக்கு முயற்சி செய்தேன்: எங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொரோனா தலைகீழாக மாற்றவிட்டது, கொரோனா சமயத்தில் எங்கள் வீட்டில் பாட்டி, மகன் உட்பட ஏழு பேருக்கும் கொரோனா தொற்று உருவானது. அப்போது என்னுடைய மகனும் கணவரும் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருந்தார்கள். முறைப்படி மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால், மகன் மற்றும் கணவரின் நிலை மோசமாக அவர்கள் மருத்துவமனையில்அனுமதித்தேன். மருத்துவமனைக்கு சென்ற இரண்டு நாட்களிலேயே மகன் உயிரிழந்தான் அடுத்து சில நாட்களில் என்னுடைய கணவரும் உயிர் இழந்துவிட்டார். என்னை குழந்தை போல் பார்த்துக்கொண்ட கணவரும், நான் வளர்த்த மகனும் இறந்துவிட்டதால், வாழவே விருப்பம் இல்லாமல் போய்விட்டது. மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தேன். என் மகளை நினைத்து இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்றார்.
இதுதான் காரணம்: தொடர்ந்து பேசிய கவிதா, கணவர் இறந்த பின், தற்போது, நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கவிதா,"பாண்டவர் இல்லம்", "செம்பருத்தி", "திருமதி ஹிட்லர்" போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்தத் தொடர்கள் அவருக்கு ஒரு புதிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்துள்ளன. மீண்டும் நடிக்க வந்தது குறித்து பேசிய கவிதா, "இப்போது நான் முழு வீச்சில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். இப்போது என் குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள், அதனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை,என்றார். தமிழ் படங்கள் மீது எனக்கு எப்போதும் பற்று உண்டு. என்னை வளர்த்தது தமிழ் சினிமாதான். தற்போது தெலுங்கு, கன்னட மொழிகளில் 5 படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் படங்களிலும் நடிப்பேன் என்று அந்த பேட்டியில் நடிகை கவிதா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











