»   »  'விஜய் சேதுபதி ஜோடி, அருவி மாதிரி கேரக்டர்' -ஆசைகள் சொல்லும் நடிகை ஸ்வாதிஷ்டா #Exclusive

'விஜய் சேதுபதி ஜோடி, அருவி மாதிரி கேரக்டர்' -ஆசைகள் சொல்லும் நடிகை ஸ்வாதிஷ்டா #Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil
டிவியில் தொடங்கி ஹீரோயின் ஆன ஸ்வாதிஷ்டா #Exclusive

சென்னை : நடிகை ஸ்வாதிஷ்டா, இன்ஜினியரிங் படிச்ச மீடியா பொண்ணு. பிரபல தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்தவர் சினிமாவில் வாய்ப்புப் பெற்று நடிகையானார்.

மிஷ்கின், ராம், பூர்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சவரக்கத்தி' படத்தில் முக்கியமான ரோல். ஜீவாவின் 'கீ' படத்தில் சூப்பரான கேரக்டர் என அடுத்தடுத்து சினிமாவில் வளர்கிறார்.

'மெட்ராஸ் சென்ட்ரல்' சேனலின் 'Half boil' வெப் சீரிஸில் நடித்து இளைஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். சினிமாவில் தனது ஆசை பற்றி நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

சவரக்கத்தி வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?

சவரக்கத்தி வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?

"பி.ஜி படிச்சிட்டு இருக்கும்போது நியூஸ் 7 டி.வி-யில் ஆங்கரிங் பன்ணிட்டிருந்தேன். அப்போ, நிறைய சினிமா பிரபலங்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. சில டைரக்டர்கள் மூலமா சினிமா வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா, அப்போ நடிக்கிறதுல இன்ட்ரெஸ்ட் இல்ல. 'பிசாசு' படம் வந்த சமயத்தில் மிஷ்கின் சார் இன்டர்வியூ பண்ணேன். அப்போ என்னை சினிமாவுக்கு வரலாமேன்னு கூப்பிட்டார். அப்படி வந்ததுதான் 'சவரக்கத்தி' சான்ஸ்."

குடும்பம், படிப்பு பற்றி?

குடும்பம், படிப்பு பற்றி?

"நாங்க தமிழ் ஃபேமிலி கிடையாது. தாய்மொழி கன்னடம். அப்பா, அம்மா ரெண்டுபேரும் இங்கேயே செட்டில் ஆனதால், நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். இன்ஜினியரிங் முடிச்சிட்டு போஸ்ட் ஜர்னலிசம் படிச்சேன். மீடியாவில் வொர்க் பண்ணிக்கிட்டே காலேஜ் முடிக்கிற நேரத்துல 'சவரக்கத்தி' படம் வந்தது. சரி, அந்தப் படம் மட்டும் பண்ணலாம் அப்படின்னு நெனைச்சேன். அதை முடிக்கிறப்போ, 'மதம்', 'கீ' னு வரிசையா வாய்ப்பு வந்தது. சரி, ட்ரை பண்ணலாமேன்னு அப்படியே இறங்கியாச்சு."

நடிக்கிற படங்கள்?

நடிக்கிற படங்கள்?

"இப்போ கூட சினிமாவுல பெரிய ஃபியூச்சர் பிளான்லாம் வச்சுக்கலை. ஜீவா நடிக்கிற 'கீ' படத்திலேயும், 'மதம்'னு ஒரு படத்திலேயும் நடிச்சிருக்கேன். ரெண்டு படமும் ஷூட்டிங் முன்னாடியே முடிஞ்சிடுச்சு. 'கீ' படத்தில் ஸ்ட்ராங்கான ஒரு கேரக்டர் பண்றேன். 'மதம்' படம் கமர்ஷியல் கிடையாது. ஆர்ட் ஃபிலிமா இருக்கும். அதில் ஹீரோயின் ரோல் பண்ணியிருக்கேன். ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு அனுப்புறதுக்காக எடுத்த படம் அது."

வெப் சீரியல்

வெப் சீரியல்

" 'சவரக்கத்தி', 'மதம்', 'கீ' மூணு படமும் முடிச்சதுக்கு அப்புறம் தான் வெப் சீரிஸ் பண்ணேன். மூணு படங்களுமே கொஞ்சம் லேட் தான். வெப் சீரியல்ல என் நடிப்பு பெரும்பாலானோரால் பாராட்டப்பட்டது. ரசிகர்கள் என் நடிப்பைப் பாராட்டி கமென்ட் பண்ணாங்க. தியேட்டர்ல வந்து படம் பார்க்கிறதை விட மொபைல் போன்லயோ, சிஸ்டம்லயோ வெப் சீரிஸ் பார்க்கிறது ஈஸியா இருக்கும் இல்லையா? வெப் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு."

வெப் சீரியல்களில் நடிப்பது ஹீரோயினுக்கான மார்க்கெட்டை பாதிக்காதா?

வெப் சீரியல்களில் நடிப்பது ஹீரோயினுக்கான மார்க்கெட்டை பாதிக்காதா?

"இப்போ, ப்ரியாமணி, ஐஸ்வர்யா ராஜேஷ்லாம் வெப் சீரிஸ் பண்ணிட்டு இருக்காங்க. இந்தியில் முன்னணி நடிகைகளே வெப் சீரியல்களில் நடிக்கிறாங்க. எனக்குத் தெரிஞ்சு படங்களைவிட நல்ல வெப் சீரியல்களுக்கு ரீச் அதிகமாதான் இருக்கு. முன்னணி நடிகையா வளர்ந்தவங்கலாம் பண்ணும்போது நான் பண்றதும் ரொம்ப சந்தோஷம். இனிமே சான்ஸ் வந்தாலும் நான் தொடர்ந்து பண்ணுவேன்."

மீடியா ஆர்வம் எப்படி வந்துச்சு?

மீடியா ஆர்வம் எப்படி வந்துச்சு?

"நான் முதலில் சைல்ட் ஆர்டிஸ்ட். அஞ்சாவது, ஆறாவது படிக்கும்போது நிறைய விளம்பரங்களுக்கு மாடலா பண்ணியிருக்கேன். ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், தி சென்னை சில்க்ஸ் மாதிரி நிறைய விளம்பரங்கள்ல வந்திருக்கேன். அப்போ இருந்தே கேமரா பயம்லாம் கிடையாது. மீடியா பிடிக்கும். அப்புறமா, டென்த்த், +2 வரும்போது முழுசா படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். இன்ஜினியரிங் ஃபைனல் இயர் பண்ணும்போது நியூஸ் ரீடிங் பண்ணலாம்னு ஆர்வம் வந்துச்சு. அப்போ தமிழ்ல நல்லாவே பேசுவேன். ஆனா, எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால, இங்கிலீஷ் நியூஸ் ட்ரை பண்ணலாம்னு கோர்ஸ் போனேன். அப்படிதான் மீடியா கேரியர் ஸ்டார்ட் ஆச்சு. இப்போ, தமிழ் வாசிக்கவும் கத்துக்கிட்டேன்."

யார் படத்தில் / யார் கூட நடிக்கணும்னு ஆசை?

யார் படத்தில் / யார் கூட நடிக்கணும்னு ஆசை?

"இப்போதான் ஃபீல்டுல வளர்ந்துக்கிட்டு வர்றோம். அதனால், எந்த ஹீரோவா இருந்தாலும் ஓகே தான். விஜய் சேதுபதி சார் கூட நடிக்கணும்ங்கிறது இப்போதைக்கு ஆசை. 'அலைபாயுதே' படத்தோட பார்ட் டூ மணி சார் எடுத்தா அதில் நான் நடிக்க ஆர்வமா இருக்கேன். மணி சார் லவ் ஸ்டோரில நடிக்கணும்ங்கிறது ஆசை. 'கீ' படத்துல சுஹாசினி மேம் கூட நடிச்சிருக்கேன். ஆனா, இந்த விஷயத்தை அவங்ககிட்ட சொல்ல பயம்."

சினிமா தவிர வேறு எதில் ஆர்வம்?

சினிமா தவிர வேறு எதில் ஆர்வம்?

"ஆர்கானிக் ப்ராடெக்ட்ஸ்னா எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம். அது சம்பந்தமா ஏதாவது தேடுவேன். கெமிக்கல் ஃப்ரீ பொருட்கள்லாம் வீட்டுலேயே எப்படி தயாரிக்கிறது அப்படிலாம் தேடி தெரிஞ்சிக்குவேன். ஃபியூச்சர்ல அது ஓரியன்டடா பிஸினஸ் பண்ற ஐடியா இருக்கு. சினிமாவுக்கு வந்துட்டதால ஃபிட்னெஸ் முக்கியம். அதனால், டெய்லி ஜிம் போறது, டயட் மெய்ன்டெயின் பண்றதுன்னு போய்க்கிட்டு இருக்கு."

சினிமாவில் ரோல் மாடல் யார்?

சினிமாவில் ரோல் மாடல் யார்?

"சினிமாவில் ஷாலினி மேம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'மதம்' படம் பண்ணும்போது அந்தப் படத்தோட டைரக்டர் என்னை ஷாலினி மாதிரி இருக்கீங்கனு சொன்னாங்க. எந்த ஆங்கிள்ல நான் அப்படித் தெரிஞ்சேன்னு தெரியலை. இப்போதான் நாம நிறைய ஹீரோயின்ஸை மேக்கப் இல்லாம பார்க்குறோம். ஆனா, அப்போவே ஷாலினி மேம் அதிகமா அலட்டலான மேக்கப் இல்லாமதான் நடிச்சிருப்பாங்க. அதுவே நேச்சுரலா இருக்கும். நடிப்பிலேயும் சின்ன வயசிலேயே சிவாஜி சார், ரஜினி சார் கூடவெல்லாம் சூப்பரா நடிச்சிருப்பாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் குடும்பப் பொறுப்புகளை ஏத்துக்கிட்டு நடிக்கிறதை விட்டுட்டாங்க. தமிழ்ல கொஞ்சம் படங்கள்ல தான் நடிச்சிருந்தாலும் 'காதலுக்கு மரியாதை' 'அலைபாயுதே' மாதிரி சிறப்பான கேரக்டர் பண்ணதால் ரொம்பப் பிடிக்கும். கேரியர்ல அவங்களோட வழியைத்தான் ஃபாலோ பண்ணணும். சினிமாவை விட்டுப் போனாக் கூட நடிச்ச படங்கள் பேசப்படணும்."

என்ன மாதிரி கேரக்டரா இருந்தா உடனே ஓகே சொல்லுவீங்க?

என்ன மாதிரி கேரக்டரா இருந்தா உடனே ஓகே சொல்லுவீங்க?

" 'காதலுக்கு மரியாதை', 'அலைபாயுதே' படங்கள்ல ஷாலினி பண்ணின கேரக்டர்ஸ் மாதிரின்னா டக்குனு ஓகே சொல்லிடுவேன். துறுதுறுன்னு செம ஆக்டிவ்வான கேரக்டர் செட் ஆகாது. ஏன்னா நானே அப்படி கிடையாது. ரொம்ப யதார்த்தமான பொண்ணு கேரக்டரா இருந்தா கண்டிப்பா பண்ணுவேன். 'மொழி' படத்துல ஜோதிகா பண்ணின கேரக்டர் மாதிரி சேலஞ்சிங்கானதுன்னா நிச்சயம் பண்ணுவேன். இப்போதான், வளர்ற ஸ்டேஜ்ல இருக்கிறதால எல்லாமே எக்ஸ்பெரிமென்ட் பண்ணனும்னு ஆசை."

சமீபத்தில் பார்த்ததில் பிடிச்ச படம்?

சமீபத்தில் பார்த்ததில் பிடிச்ச படம்?

"சமீபத்துல பார்த்த படங்கள்ல 'அருவி' ரொம்ப பிடிச்சது. இந்த மாதிரி படத்தில் நடிக்க நிஜமா ரொம்ப தைரியம் வேணும். ஹீரோயினுக்கு எய்ட்ஸ் நோய் அப்டிங்குறதுதான் ஒன்லைன். அதைக்கேட்டதுமே பல ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. அதிதி அந்த ரோல் பண்ணினதுல ரொம்ப சந்தோஷம். என்னைப் பொறுத்தவரைக்கும் ஹீரோயின்னா அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு பிரின்ஸிபல்லாம் இருக்கக் கூடாது. இந்த மாதிரி எனக்கு சான்ஸ் கிடைச்சதுனா கண்டிப்பா பண்ணுவேன்."

அதிகமா பயன்படுத்தும் வார்த்தை எது?

அதிகமா பயன்படுத்தும் வார்த்தை எது?

"எனக்கு கோவம் ரொம்ப ஈஸியா வந்துடும். அதனால், 'பை' (Bye) தான் நிறைய யூஸ் பண்ணுவேன். பேசிட்டே இருக்கும்போது டென்ஷன் ஆனா, 'ஓகே பை, போன வை', அந்த மாதிரி கான்வெர்சேஷன் கட் பண்ற வார்த்தை தான் அடிக்கடி யூஸ் பண்றேன். அது ரொம்ப தப்பான விஷயம்தான்னு எனக்கே தெரியுது. அதைத் தவிர்க்க முயற்சி பண்றேன்."

வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் / பிடிச்ச Quote ?

வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் / பிடிச்ச Quote ?

" 'Just when the caterpillar thought the world was ending, he turned into a butterfly' - கம்பளிப்பூச்சிகள், உலகம் அழியப்போவதாக நினைக்கும்போது, கடவுள் அவற்றை பட்டாம்பூச்சிகளாக மாற்றிவிட்டார்'னு ஒரு வாசகம். அது எனக்கு ரொம்ப இன்ஸ்பயரிங்கா இருக்கும்."

English summary
Actress Swathishta shares her cinema entry and career development. An exclusive interview of Swathishta is here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X