»   »  எனக்குப் பிடித்த ஹீரோ ரஜினிதான்! - 'அட்ரா மச்சான் விசிலு' நாயகி நைனா சர்வார்

எனக்குப் பிடித்த ஹீரோ ரஜினிதான்! - 'அட்ரா மச்சான் விசிலு' நாயகி நைனா சர்வார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்குப் பிடித்த ஹீரோ ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான் என்கிறார் அட்ரா மச்சான் விசிலு படத்தின் நாயகி நைனா சர்வார்.

சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள அட்ரா மச்சான் விசிலு வரும் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் ரஜினியைக் கிண்டலடித்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்தப் படத்தின் நாயகி நைனா சர்வாருக்கு இது முதல் தமிழ்ப் படம். தனது அனுபவங்களை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.


பெங்களூர் பொண்ணு

பெங்களூர் பொண்ணு

"என் சொந்த ஊர் பெங்களூர். பி காம் ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன்.


ஏற்கெனவே கன்னடத்தில் நான்கு படங்கள் முடித்துவிட்டேன். அட்ரா மச்சான் விசிலு எனக்கு முதல் தமிழ்ப் படம் என்றாலும், இன்னொரு தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளேன். அந்தப் படம் கொளஞ்சி. ஸோ.. மொத்தம் ஆறு படங்கள்.


இந்தப் பட இயக்குநர் இதற்கு முன் நான் நடித்த படங்களைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. இந்தப் படத்துக்காக என்னை அணுகி கதை சொன்னார் இயக்குநர்.
முழுக் கதை தெரியாது

முழுக் கதை தெரியாது

கதை கேட்டபோது என் பாத்திரத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தினேன். நகைச்சுவையுடன் கூடிய பப்ளியான ஒரு ரோல். ரொம்பப் பிடித்திருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன். முழுசாக நடித்து முடித்த பிறகுதான் எனக்கு இந்தக் கதை எதைப் பற்றியது என்பது புரிந்தது. ஆனால் எனக்கு என் பாத்திரம் திருப்தியாக இருந்தது. அது போதும்.


ஹீரோ சிவா

ஹீரோ சிவா

என் ஹீரோ சிவா மாதிரி வசதியான அதாவது கன்வீனியன்டான ஒருவரைப் பார்க்க முடியுமா தெரியவில்லை. எனக்கு தமிழைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேசுவது சிரமம். அதனால் செட்டில் எல்லோருடனும் பேச சிவாதான் உதவினார். நானும் இயக்குநரும் சிவா மூலம்தான் பேசிக் கொள்வோம்.


பவர் ஸ்டாருடன்

பவர் ஸ்டாருடன்

இந்தப் படத்தில் நடித்திருக்கும் பவர் ஸ்டார் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருக்கும் எனக்கும் சேர்ந்த மாதிரி சீன்கள் இல்லை. அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன். ஜோடியாகவும்தான்... இதில் தயக்கம் ஏதுமில்லை.


ரஜினிதான்

ரஜினிதான்

அட்ரா மச்சான் விசிலு பாடல் புரமோஷன் பார்த்து விட்டு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் எதையும் ஏற்கவில்லை. மனசுக்குப் பிடிச்ச மாதிரி பாத்திரங்கள் அமைந்தால் நானே என் அடுத்த படத்தை அறிவிப்பேன்.


தமிழில் என் பேவரைட் நாயகி நயன்தாரா.அப்படி ஹீரோ?

அப்படி ஹீரோ?

வேறு யார்... எவர்கிரீன் ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான்!" என்றார்.


இதெப்டி இருக்கு?English summary
Adra Machan Visilu heroine says that her favourite hero is Rajinikanth. Note, the movie is said to be taken against Rajinikanth.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil