சல்மான் கான் வரதே லேட்.. எல்லாமே சிஜி.. இனிமே பாலிவுட் பக்கமே போக மாட்டாரா ஏ.ஆர். முருகதாஸ்?

சென்னை: தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டுக்கு செல்ல வேண்டும் என்கிற கனவு நடிகர்களை போல இயக்குநர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அட்லிக்கு முன்பே ஏ.ஆர். முருகதாஸ் பல ஆண்டுகளுக்கு முன்னதாக பாலிவுட்டுக்குச் சென்று அமீர்கானை வைத்து கஜினி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இந்த ஆண்டு சல்மான் கானை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் படம் படுதோல்வியை சந்தித்தது.

அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கியிருக்கும் மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் போல இவரும் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக் கொடுத்து மதராஸி படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

AR Murugadoss blames Salman Khan s late arrival on set as the main reason for the failure of Sikandar
Photo Credit:

சமீபத்தில் பரத்வாஜ் ரங்கனுக்கு அளித்த பேட்டியில் ஷூட்டிங்கிற்கு சல்மான் கான் எப்போதுமே ரொம்ப லேட்டாகத்தான் வருவார் என்று பேசியிருப்பது சல்மான் கான் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறை சொல்லும் இயக்குநர்கள்: தங்கள் படங்களில் ஏற்படும் தவறுகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என தொடர்ந்து சில டாப் இயக்குநர்கள் மறுப்பதோடு அல்லாமல் மற்றவர்கள் மீது அந்த பழியை அசால்ட்டாக போட்டுவிட்டு தங்களது அடுத்த படத்திற்கான ப்ரோமோஷனை செய்வது தவறான செயல் என ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். ஒரு படம் சரியாக போகவில்லை என்றால் தான் தவறவிட்டது எங்கே என்றும் தனது குறைகளை மட்டுமே ஓபனாக பேசாமல் என் மீது எந்தவொரு தவறும் இல்லை எல்லாத்துக்கும் ஹீரோ தான் காரணம் என கைவிரித்து வருவது எந்த வகையில் நியாயம் என ரசிகர்கள் கேட்கின்றனர்.

தர்பாரை தொடர்ந்து சிக்கந்தரும் தோல்வி: ரஜினிகாந்தை வைத்து தர்பார் படம் இயக்க ஏ.ஆர். முருகதாஸுக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில், தர்பார் படத்தை போலவே சூர மொக்கை படமாக சிக்கந்தரை எடுத்துக் கொடுத்திருந்தார் ஏ.ஆர். முருகதாஸ். படத்தின் ரிலீஸுக்கு முன்பு வரை ஹீரோ பற்றியும் படத்தின் கதை பற்றியும் சிலாகித்து பேசிய அவர் தற்போது படத்தின் தோல்விக்கு சல்மான் கான் தான் காரணம் என ஒட்டுமொத்த பழியையும் அவர்மீது தூக்கிப் போட்டிருப்பது பாலிவுட் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

AR Murugadoss blames Salman Khan s late arrival on set as the main reason for the failure of Sikandar
Photo Credit:

ரொம்ப லேட்டா வருவார்: சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் இருந்தது. அதனால், அவரை வைத்து வெளியே எல்லாம் படம் பண்ண முடியாது. ஒட்டுமொத்த படத்தையும் க்ரீன்மேட்டில் தான் எடுத்தாக வேண்டும், சிஜி துணையுடன் தான் படங்கள் வருகின்றன. மேலும், அவர் ரொம்ப லேட்டாத்தான் வருவார், இப்படியெல்லாம் இருந்தால் படம் எப்படி நல்லா உருவாகும் என ஏ.ஆர். முருகதாஸ் பேசியிருப்பது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

சிம்பு போல சல்மான் கான்: பாலிவுட் சிம்புவா சல்மான் கான் என நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். சல்மான் கானை போலவே சிம்புவும் இன்னமும் திருமணம் செய்யாமல் பேச்சுலராக உள்ளார். ஆனால், ஏகப்பட்ட டாப் நடிகைகளுடன் இருவரும் பல வருடங்கள் டேட்டிங் செய்ததாகவும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சல்மான் கான் ரசிகர்களுக்கு ஏ.ஆர். முருகதாஸின் இந்த பேட்டி கோபத்தை கிளப்பியிருக்கிறது.

கதையே சுமார் தான்: ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை தோல்விப் படமாக கொடுத்த முருகதாஸுக்கு சல்மான் கான் தனது படத்தை இயக்க வாய்ப்புக் கொடுத்து உயிரையே பணயம் வைத்து தைரியமாக நடித்துக் கொடுத்தால் இப்படியா நக்கலாக பேசி சிரிப்பது என சல்மான் கான் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் முருகதாஸை கடிக்க ஆரம்பித்து விட்டனர். மேலும், தர்பார் மற்றும் சிக்கந்தர் படங்களின் கதையே ரொம்ப ரொம்ப சுமார் தான் என்றும் மதராஸி வரட்டும் என்ன ஆகுதுன்னு பார்க்கிறோம் என ரவுண்டு கட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X