»   »  அசினுக்கு கமல் தரும் டிப்ஸ்

அசினுக்கு கமல் தரும் டிப்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அசின் என்றால் ரொம்ப சுத்தம் என்று அர்த்தமாம். அந்த பொருளுக்கேற்ப தானும் பரிசுத்தமான பெண் எனதனக்குத்தானே ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறார் அசின்.

அசின் உண்மையிலேயே லக்கி பார்ட்டிதான். இல்லாவிட்டால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடனேயேஜோடி போட்டு அசத்த முடியுமா? (அசின் போடும் சோப்பின் பலம் அப்படி!)

விக்ரம், விஜய், அஜீத், கமல் என முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து திறமை காட்டி வரும் அசின் இப்போதுவிஜய்யுடன் போக்கிரியில் ரவுண்டு கட்டி விளையாடி வருகிறார். சிம்புவுடனும் ஒரு படத்தில் சேர்ந்துகலாய்க்கவுள்ளார். அஜீத்துடன் ஆழ்வாரில் அசத்தி வருகிறார். கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவுடனும்மீண்டும் ஜோடி சேர தயாராகி வருகிறார்.

இப்படி லீடிங் ஹீரோக்களுடனேயே தொடர்ந்து சேருகிறீர்களே, உங்களுக்கு எங்கேயோ எக்குத்தப்பா மச்சம்இருக்குப்பா என்றால், மோனலிசா புன்னகையை உதிர்த்து விட்டு பதில் தருகிறார் அசின்.

அப்படியெல்லாம் இல்லை, கடவுளின் அருள்தான் இது. அதுதான் தொடர்ந்து எனக்கு முன்னணிஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகள் வருகின்றன.

விஜய், அஜீத், விக்ரம், கமல் என திறமையான நடிகர்களுடன் தொடர்ந்து சேர்ந்து நடிப்பது அதிர்ஷடமானவிஷயம்தான். எத்தனை பேருக்கு இது கிடைக்கும்?

வரலாறு படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. அதேசந்தோஷத்துடன் ஆழ்வார் படத்திலும் அஜீத்துடன் அசத்தியுள்ளேன். அஜீத் பற்றி சொல்ல வேண்டும். அவர்பயங்கர பாஸ்ட். விறுவிறுப்பான ஆசாமி. இதனால் அவருக்கு நான் செல்லமாக ரோபோட் என்று பெயர்வைத்துள்ளேன்.

அவருக்கு ஈடு கொடுத்து நானும் புகுந்து விளையாடியுள்ளேன் (அய்யங்கொக்கா, சூப்பர்!)

ஆழ்வார் படத்திலும் எங்களது ஜோடி பேசப்படும். நான் அஜீத்துக்கு சரியான ஜோடி என்ற பெயரை எடுப்பேன்.உண்மையிலேயே எங்களது ஜோடிப் பொருத்தம் சூப்பராக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். (கொஞ்சநாளைக்கு முன்னாடி விஜய்யையும், சூர்யாவையும் தனக்கு சூப்பரான ஜோடின்னு சொன்னாப்புல கேள்வி!)

இதேபோல போக்கிரி படத்திலும் எனக்கு ஜாலியான ரோல்தான். விஜய்யுடன் விளையாடி வருகிறேன். அவரும்வழக்கம் போல வெளுத்துக் கட்டுகிறார். சிவகாசி அனுபவத்தால் விஜய்யுடன் ஜாலியாக நடிக்க முடிகிறது.

அப்புறம் முக்கியமான ஒரு நபர் கமல். அவருடன் தசாவதாரம் படத்தில் நடிப்பது மிகப் பெரிய அனுபவத்தைக்கொடுத்துள்ளது. அவர் ரொம்ப வித்தியாசமாக, வினோதமாக நடிக்கிறார். இப்படி ஒரு நடிப்பை நான் பார்த்ததேஇல்லை (அச்!). எனக்கு அந்தப் படத்தில் எத்தனை ரோல் என்று சொல்ல முடியாது. சொன்னால் அவ்வளவுதான்,கமல் சார் உதைப்பார். அதில் எனக்கு நல்ல பாத்திரம். அழகாகச் செய்து வருகிறேன். நிறைய டிப்ஸ் தருகிறார்கமல் சார் என்று சொல்லி மூச்சை நிறுத்தினார் அசின்.

அசினுக்கு நல்ல நடிகைன்னு பெயர் எடுப்பதுதான் லட்சியமாம். எனது பெயரே சுத்தமானவள் என்ற அர்த்தம்கொண்டது. அதற்கேற்ப யாரிடம் கெட்ட பெயர் எடுக்காமல், நல்ல நடிகை, சுத்தமான பெண் என்ற பெயரைஎடுக்க வேண்டும். அதுதான் கடைசி வரை நம் கூடவே வரப் போகிறது, இல்லையா என்று தத்துவார்த்தமாகமுடித்தார் அசின்.

அசின் பேசினாலும் அழகுதான்!

Read more about: interview with asin

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil