»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கர்நாடகாவில் பிறமொழிப் படங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 7 வாரத் தடையின் எதிரொலியாக கன்னடத்திரையுலகைச் சேர்ந்தவர்களை தங்கள் மொழிப் படங்களில் ஒப்பந்தம் செய்வதில்லை என்று பிற மொழித்திரையுலகினர் மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை ஹைதராபாத்தில் கூடி ஆலோசனை நடத்தியது. இதில் கர்நாடக சினிமாவுக்குஎதிராக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கர்நாடகாவுக்கு சென்று படப்பிடிப்பு நடத்த கூடாது; கன்னடமொழிப்படங்களில் தெலுங்கு நடிகர்கள் நடிக்க கூடாது;

கன்னட படங்களை தெலுங்கில் டப்பிங் செய்யகூடாது; கன்னட நடிகர், நடிகைகளை தெலுங்கு படங்களில் நடிக்கவைக்க கூடாது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் நகல்கள் அகில இந்திய திரைப்படசம்மேளனத்துக்கும், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இதனையடுத்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக் கூட்டம் அதன் தலைவர் தேவிவரப்பிரசாத் தலைமையில்சென்னையில் இன்று நடந்தது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தலைவர் முரளிதரன், ராஜன்,சித்ரா லட்சுமணன் மற்றும் பெப்சி விஜயன், கேயார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை எடுத்த முடிவுகளை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைவழிமொழிவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் சில தீர்மானங்களும் இக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

கன்னட பட நடிகர், நடிகைகளை இந்தியாவில் வேறு எந்த மொழி படங்களிலும் நடிக்க அனுமதிக்கக் கூடாது;கன்னட படப்பிடிப்புகளை எந்த மாநிலத்திலும் நடத்த அனுமதிக்க கூடாது என அந்தந்த மாநில அரசுகளுக்குகோரிக்கை வைப்பது; இனி யாரும் கர்நாடகாவில் படப்பிடிப்பு நடத்த போக கூடாது;

கன்னடப்படங்கள் சம்பந்தப்பட்ட எந்த பணியையும் மற்ற மாநிலங்களில் நடத்த விட கூடாது; பியூஜி, கோடாக்உள்பட எந்த பிலிம் நிறுவனங்களும் கன்னட படங்களுக்கு பிலிம் சுருள்கள் வழங்க கூடாது; அவுட்டோர் யூனிட்வழங்க கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின..

இந்தத் தீர்மானங்கள் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, கன்னடத்திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தேர்தலில் நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் போட்டியிடவுள்ளார்.

இந் நிலையில் பிற மொழிகளில் கவர்ச்சித் திறமை காட்டி வரும் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகைகளிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

ரம்யா:

தற்போது இந்தியில் ஜான் ஆபிரஹாம் மற்றும் அவ்தாப் ஷிவ்தாஷனியுடன் இணைந்து தேகா ஜெயகா என்றஇந்திப் படத்திலும், கிரி என்ற தமிழ்ப் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்து வருபவர் ரம்யா. இதில் கிரி படம்விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கஒப்பந்தமாகியுள்ளார்.

தடை விதிக்கப்படுவதாக வரும் பேச்சு குறித்து அவரிடம் கேட்டபோது, மற்ற மொழிப் படங்களைச் சேர்ந்தவர்கள்எங்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும்? நாங்கள் தொடர்ச்சியாக அவர்களின் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது, அத்தகைய முடிவை அவர்கள் எடுக்க மாட்டார்கள்.

கன்னட திரையுலகில் நாங்களும் ஒரு அங்கம் என்ற முறையில், கர்நாடகாவில் மற்ற மொழிப் படங்களை கொஞ்சம்காலதாமதமாக வெளியிடக் கோருகிறோம். காலதாமதம் மட்டும்தானே தவிர நிரந்தரத் தடை இல்லை. இதைஇங்குள்ள மக்கள் புரிந்து கொண்டு, ஏழு வார தாமதத்திற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள் என்றார்.

ரக்ஷிதா:

ரம்யாவுக்கு அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு மொழிகளில் திறமை காட்டி வரும் ரக்ஷிதா இந்த விஷயம் குறித்துகொஞ்சம் பயந்தவராக காணப்படுகிறார். அவர் கூறுகையில்,

அடுத்த வாரம் இரண்டு தெலுங்குப் படங்களை ஒப்புக் கொள்வதாக இருந்தேன். இப்போது எழுந்துள்ளபிரச்சினையால் அந்த வாய்ப்புகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தப் பிரச்சினையின் முடிவுகுறித்து எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில், கர்நாடகாவில் எடுக்கப்பட்ட முடிவுக்குஆதரவளிக்க உள்ளேன் என்றார்.

விஜய்யுடன் இவர் நடித்த மதுர படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன நிலையில், இன்னும் கர்நாடகாவில் ரிலீஸ்ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாவனா:

தமிழில் ஆகா எத்தனை அழகு படத்தில நடித்து போணியாகாமல் இப்போது மும்பையில் தயாரிப்பாளர்கள்மற்றும் இயக்குநர்களைச் சந்தித்து வாய்ப்பு வேட்டையாடி வருகிறார் நடிகை பாவனா. அவர் இது குறித்துகூறியதாவது:


நான் சந்தித்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இது குறித்துதான் என்னிடம் கேட்கிறார்கள். நான் கர்நாடகாவில்இருந்தபோது, கன்னட திரையுலகில் நானும் ஒரு அங்கம். அதேபோல் மற்ற மாநிலங்களில் நான் இருக்கும்போது,அந்தந்த திரையுலகைச் சேர்ந்தவளாவேன்.

கடந்த ஒரு வருடமாக நான் மும்பையில் இருக்கிறேன். எனவே இந்த புது விதிமுறைகள் என்னைப் பாதிக்காது எனநினைக்கிறேன் என்று படு உஷாராகப் பதிலளித்தார்.

இருப்பினும் பெரும்பாலான கன்னட நடிகைகள் இந்த திடீர் பிரச்சினையால் கதிகலங்கித் தான் போயுள்ளனர்.கர்நாடகாவில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தால் கையில் தேவையான அளவு காசு புழங்காது என்பதால்வகையான சம்பளத்திற்காக அடுத்த மொழிகளில் திறமை காட்டுவதையே விரும்பி வந்த இவர்கள் இப்போது சற்றுஆடித்தான் போயுள்ளனர்.

கன்னட திரையுலகினருக்கு மட்டும் தடை என்ற அளவில் இருக்கும் இந்தப் பிரச்சினை சற்று திசை மாறி,கர்நாடகாவுக்கு எந்தப் படத்தின் ரீ மேக் உரிமையையும் தரக் கூடாது என்று போனால்..? இந்த நினைப்பு வேறுகன்னடத் திரையுலகினர் பலரின் வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil