»   »  அய்யோ.. பிபாஷா திருந்துறார்

அய்யோ.. பிபாஷா திருந்துறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூம் 2ல் நீச்சல் உடையில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிபாஷா பாசு, இனிமேல் என்னை பிகினி உடையில் பார்க்க முடியாது, நீச்சல் காட்சிகளுக்கு விடை கொடுத்து விட்டேன் என்று கூறி ரசிகர்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தூம் 2 படத்தில் தாம் தூம் என கலக்கியிருந்தவர் பிபாஷா பாசு. ஐஸ்வர்யா ராயை விட அதிரடியா கிளாமரில் ரசிகர்களின் உள்ளத்தைக் கிள்ளியிருந்தார்.

இந்த அளவுக்கு கிளாமர் தேவையா என்று பிபாஷாவிடம் கேட்டால், தூம் 2 படத்திற்கு நீச்சல் உடையில் நடிப்பது அவசியமாக இருந்தது. அதனால் நடித்தேன். இனிமேல் சினிமாவில் நீச்சல் காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

தனிப்பட்ட முறையில், விமுறை நாட்களில் மட்டுமே என்னை நீச்சல் குளத்தில் இனிமேல் பார்க்கலாம். சினிமாவில் இனிமேல் பிகினிக்கு டாட்டா என்றார் பிபாஷா.

சரி, ஜான் ஆப்ரகாம் மேட்டர் என்னாச்சு என்று வம்புக்கு வாய்ப்பிருக்கிறதா என்று தோண்டினோம். எனக்கும், ஜானுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. எங்களுக்குள் பிரச்சினை என்று கரீனா கபூர் கட்டி விட்டது வெறும் புரளிதான். அதை ரசிகர்ள் நம்பவில்லை.

நானும் அவரும் சேர்ந்துதான் இருக்கிறோம். கோல் படத்தில் சேர்ந்துதான் நடித்து வருகிறோம். யார் என்ன கூறினாலும் கவலையில்லை. நான் யாருடனும் பிரச்சனை செய்யமாட்டேன், அதேசமயம் வந்த பிரச்சனையும் விட மாட்டேன் என்கிறார் பிபாஷா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil