விஜய்யை நினைத்து கஷ்டமா இருக்கு.. அவர்களை எல்லாம் மன்னிக்கவே மாட்டேன்.. போஸ் வெங்கட் பேட்டி!
கரூர் கூட்ட நெரிசலில் குழந்தை உயிரிழந்தது குறித்து நடிகர் போஸ் வெங்கட் ஆவேசமாகப் பேசினார். விஜய் தனது கட்சி அனுபவமின்மையை ஒப்புக்கொண்டு, இந்த துயர சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார். கூட்ட மேலாண்மை குறைபாடுகள், தவறான இடத் தேர்வு குறித்து கேள்விகளை எழுப்பி, அரசுக்கு முன் விஜய் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் கைக்குழந்தையை இழந்த தாயின் பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "உங்களதான் குழந்தையை தூக்கிட்டு வரக்கூடாதுன்னு சொன்னாரே உங்க தலைவர், ஏன்மா கூட்டிட்டு வந்தீங்க?" என்று போஸ் வெங்கட் கேள்வி எழுப்பியது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விஜய் அவர்கள் கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து நமது பிலிமி பீட் தளத்துக்கு பேட்டி அளித்த நடிகர் மற்றும் இயக்குநர், போஸ் வெங்கட், "நம்ம பேசிட்டு இருக்கற நேரத்துல ஒரு உயிர் போயிருச்சு. இது ஒரு துயரமான இன்டர்வியூ" என்று வருத்தம் தெரிவித்தார். அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்தார்.

தவேகா கட்சி புதியதாக ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், அனுபவமின்மையே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம். விஜயகாந்த் அவர்கள் 'என் மாநாட்டிற்கு போலீசே தேவையில்லை' என்று சொன்னார். அதை செஞ்சும் காமிச்சாரு. ஏன் இந்த பேசிக்ஸ் உங்களுக்கு தெரியாம போச்சு?"
தி.மு.க-விலிருந்து பிரிந்து வந்திருந்தாலும், அவர்களிடம் இருந்த ஒழுங்கையும், தொண்டரணியையும் தவேகாவினர் கற்றுக்கொள்ள தவறிவிட்டதாகக் கூறினார். தொண்டர்களுக்கு அடையாள அட்டை அணிவித்து கட்டுக்கோப்பாக வைத்திருந்தால், கூட்ட நெரிசலைத் தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து.
மிகப்பெரிய விபத்து: உழவர் சந்தை போன்ற சிறிய இடத்தை விஜய் கேட்டது ஏன் என்று தெரியவில்லை. "நீங்க கேட்ட இரண்டு இடத்துல கூட்ட நடத்தி இருந்தால், யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்டது, 30 அடி ரோடு, காவல்துறை வழங்கியது 80 அடி ரோடு, ஆனால் எதற்காக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சின்ன இடத்தை கேட்டார்கள் என்று தெரியவில்லை. அரசு சரியான இடத்தையே கொடுத்துள்ளது. ஆனால் தவெகவினர் தான் தவறான முடிவுகளை எடுத்து அசம்பாவதத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள். அரசை குறை சொல்லும் முன், தங்கள் தவறுகளை விஜய் ஒப்புக்கொள்ள வேண்டும். விஜய், இந்த இழப்புக்கு நாங்க தார்மீக பொறுப்பேற்கிறோம் என்று சொன்னா மட்டும்தான் இது எதார்த்தமாக இருக்கும்" . இல்லையென்றால், 'கோ' படத்தில் வருவது போலாகிவிடும் என்று எச்சரித்தார்.
விஜய்க்கு எதிரிகளே இல்லையா?: செருப்பு வீசியது, கல் எறிந்தது போன்ற சம்பவங்கள் திட்டமிட்ட சதியா என்ற கேள்விக்கு, "விஜய்க்கு எதிரிகளே இல்லையா? ஏன் இதை திமுக தான் செய்திருக்கணும்?" என்று போஸ் வெங்கட் பதில் கேள்வி எழுப்பியது மட்டும் இல்லாமல், ஒருதலைப்பட்சமாக ஒரு விஷயத்தை மையப்படுத்தக் கூடாது என்றார். ஒரு பெண், விஜய் மேல தப்பு இல்லை. குழந்தையை கூட்டத்திற்கு அழைத்து வந்தது யார் தவறு என்று கேள்வி எழுப்பினார். மேலும், "உங்களதான் குழந்தையை தூக்கிட்டு வரக்கூடாதுன்னு சொன்னாரே உங்க தலைவர், ஏன்மா கூட்டிட்டு வந்தீங்க?". இந்த நேரத்தில் யாரெல்லாம் அரசியல் செய்கிறார்களோ அவர்களை எல்லாம் மன்னிக்கவே மாட்டேன். அண்ணன் சீமான் மட்டும் தான் இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல் இருக்கிறார்.

பரிதாபம்: விபத்து நடந்தவுடன் செந்தில் பாலாஜி விரைந்து வந்ததை சந்தேகிக்க வேண்டாம் என்றார். கரூர் மக்களுக்கு அவர் எப்போதும் உதவியாக இருப்பார் என்றும் கூறினார். ஆனால், விஜய் ஏன் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார் போஸ் வெங்கட். தமிழக வெற்றிக் கழகத்தை நினைத்து, பரிதாபம் இருந்தாலும், இந்த விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. அரசு நியமித்துள்ள விசாரணை ஆணையத்தின் முடிவுகளுக்காக காத்திருப்போம் என்று போஸ் வெங்கட் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











