twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive: 90ml டீசரை திட்டுபவர்கள், படத்தை பார்த்த பிறகு நிச்சயம்...: டைரக்டர் அனிதா உதீப் ஓபன்டாக்

    90 எம்எல் படம் முழுக்க முழுக்க பெண்களின் பார்வையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குனர் அனிதா உதீப்.

    |

    Recommended Video

    அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம் எல் படத்தின் டீசர்-வீடியோ

    சென்னை: 90 எம்எல் படம் முழுக்க முழுக்க பெண்களின் பார்வையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என அப்படத்தின் இயக்குனர் அனிதா உதீப் கூறியுள்ளார்.

    ஓவியா நடிப்பில் அனிதா உதீப் இயக்கியிருக்கும் படம் 90 எம்எல். இப்படத்திற்கு டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு ஏ சான்று கிடைத்துள்ள போதிலும், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகாதேவகி போன்ற படங்களையே தூக்கி சாப்பிடும் வகையில் இருக்கிறது இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும்.

    டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இப்படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. பெும்பான்மையானோர் படத்திற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் அனிதா உதீப்பிடம் பேசினேன். நம்மிடம் அவர் கூறியதாவது,

    90ml teaser: டீசரைப் பார்த்துட்டு ஓவியா ஆர்மில இருந்து ரிசைன் பண்ணுனவங்க எல்லாம் கையத் தூக்குங்க! 90ml teaser: டீசரைப் பார்த்துட்டு ஓவியா ஆர்மில இருந்து ரிசைன் பண்ணுனவங்க எல்லாம் கையத் தூக்குங்க!

    பெண்களின் பார்வை:

    பெண்களின் பார்வை:

    " 90 எம்எல் படம் முழுக்க முழுக்க பெண்களின் பார்வையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இந்த சமுதாயத்தில் ஆண்கள் நினைத்ததை நினைத்த இடத்தில் பேசவோ, செய்யவோ முடியும். ஆனால் ஒரு பெண்ணால் அப்படி நடந்துகொள்ள முடிவதில்லை. ஆசைகள் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் அதை பெண்களால் வெளிப்படுத்த முடிவதில்லை என்பது தான் பிரச்சினை.

    பெண் சுதந்திரம்:

    பெண் சுதந்திரம்:

    பெண் சுதந்திரம், முன்னேற்றம் எல்லாம் வெளியில் இருந்து வருவதைவிட, நமக்குள் தான் அது முதலில் வேண்டும். முதலில் பெண்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கு யாரும் உத்தமர்களும் அல்ல மோசமானவர்களும் அல்ல. இந்த இடைப்பட்ட எதார்த்தத்தை தான் 90 எம்எல் பேசுகிறது.

    கருத்துப் படமல்ல:

    கருத்துப் படமல்ல:

    பெண் சுதந்திரம் என்றதும், அவர்கள் மது அருந்தலாம், யாருடன் வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்பதை எனது படம் போதிக்கவில்லை. படம் பார்த்தால் உங்களுக்கு அது புரியும். மேலும் இது கருத்து சொல்லும் படமும் அல்ல. நம் வீட்டு பெண்களின் எதார்த்த முகத்தை இதில் பார்க்கலாம்.

    என் கேள்வி:

    என் கேள்வி:

    எல்லா படத்திற்கும் போல இந்த படத்திற்கும் எதிர்ப்பு வரும் என எனக்கு தெரியும். அது பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. எந்த பிரச்சினையையும் நாங்கள் சமாளிப்போம். இந்த படம் பற்றி யாரிடம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார். ஒரு பெண் தனது செக்ஸ் உள்ளிட்ட விருப்பத்தை வெளிப்படையாக பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என்பது தான் என்னுடையே கேள்வி.

    நம்பிக்கை:

    நம்பிக்கை:

    90 எம்எல் பார்த்துவிட்ட சென்சார் அதிகாரிகள் எல்லோருமே பாராட்டினார்கள். மிகவும் புரட்சிகரமாக இருக்கிறது என்றார்கள். படத்தில் கூறப்பட்டுள்ள கருத்தை ஆமோதித்தார்கள். டீசரை பார்த்துவிட்டு திட்டுபவர்கள், படத்தை பார்த்த பிறகு நிச்சயம் பாராட்டுவார்கள். படத்தில் வரும் அனைத்து விஷயங்களுக்கும் காரணங்கள் இருக்கின்றன", என இவ்வாறு அனிதா உதீப் கூறினார்.

    English summary
    The 90 ml movie director Anita Udeep said that there is no immoral thoughts in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X